Thalapathy Vijay: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பிரஷாந்த், சினேகா, பிரபு தேவா, மோகன் ஆகியோரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தளபதி சூட்டிங் வேலைகளில் பிசியாக இருந்தாலும், அவருக்கு முழு நோக்கமும் அரசியலில் தான் இருக்கிறது என்பது லியோ சக்சஸ் மீட்டிங்கில் நன்றாகவே தெரிந்தது. படத்தின் வெற்றி விழாவுக்கு வந்துட்டு, படத்தை பற்றியோ அல்லது படக்குழுவை பற்றியோ எதுவுமே பேசவில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய் பேசிய பல விஷயங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே இருந்தது.
லியோ சக்சஸ் மீட்டிங்கில் சில விஷயங்கள் அவருக்கு நெகட்டிவாக மாறியது. மேலும் வெற்றியடைந்த ஒரு படத்தை பற்றியம், அதில் வேலை செய்தவர்களை பற்றி பேசாமல் இருந்தது பற்றியும் படக்குழுவுக்கே சங்கடமாக இருந்ததாக தெரிகிறது. இது தளபதியின் காதுக்கு சமீபத்தில் சென்று இருக்கிறது. விஜய்க்கும் இந்த விஷயம் அப்செட் ஆகி இருக்கிறதாம்.
இதனால் தளபதி லியோ டீமுக்காக ஒரு பிளான் போட்டு இருக்கிறார். விஜய் சூட்டிங்கில் பிசியாக நடித்து கொண்டிருப்பதால், அவரால் இந்தியா வர இயலாது. அதனால் லியோ படத்தின் ஒட்டுமொத்த குழுவையும் தாய்லாந்திற்கு வர சொல்லி இருக்கிறாராம். லியோ படத்தின் வெற்றி விழாவை படக்குழுவுடன் சேர்ந்து தாய்லாந்தில் கொண்டாட போகிறார்களாம்.
இந்த பார்ட்டியில் சரக்கு முதற் கொண்டு எல்லாமே இருக்கிறதாம். இதன் மொத்த செலவையும் விஜய் தான் ஏற்று கொள்கிறாராம். படக்குழுவினர் வேண்டாம் என சொல்லியும் விஜய் கேட்பதாய் இல்லையாம். இந்த பார்ட்டியில் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிட்டது.
த்ரிஷா இப்போது துபாயில் உள்ள அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கிறார். கண்டிப்பாக இந்த பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். த்ரிஷா மூலம் அஜித் மற்றும் விஜய் சந்திப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் லியோ படத்தின் சக்சஸ் பார்ட்டி புகைப்படங்களை எதிர்பாக்கலாம்.