பெருந்தன்மையில தலைவரை விட அற்பமான உலக நாயகன்.. மொத்த படக் குழுவையும் கும்பிட செய்த ரஜினி

Kamal- Rajini Controversy: சமீபத்தில் கமலஹாசன் தன்னுடைய 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் சினிமாவில் நுழைந்து 63 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனா இவர் பெருந்தன்மையில் தலைவரை விட அற்பமாக நடந்து கொண்டிருக்கிறார்.

திரையுலகில் சகலகலா வல்லவராக இருக்கும் கமல், தன்னுடைய 69வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் நடத்தினார். பல முன்னணி பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர். ஆனால் கமல் தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களுடன் கைகுலுக்க தயங்கினார்.

ஆனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டூப் போட்டு நடித்த வியர்வை சட்டையை எந்தவித தயக்கமும் இன்றி போட்டுக்கொண்டு படத்தில் நடித்து மொத்த பட குழுவையும் அதிர வைத்துள்ளார். பொதுவாக படத்திற்கான டூப் எடுக்கப்படுகிறது என்றால், ஒரே மாதிரி 4 சட்டைகள் ஏற்பாடு செய்வது உண்டு.

அப்பொழுதுதான் பெரிய நடிகர்களுக்கு டூப் போட வசதியாக இருக்கும். ஆனால் சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா, படையப்பா படத்தில் அந்த மாதிரி ஏற்பாடு செய்யவில்லை. ஒரே ஒரு சட்டை மட்டுமே இருந்தது. அந்த சமயத்தில் டூப் போட்ட சட்டையவே ரஜினிக்கு கொடுப்பதா என எல்லோரும் தயங்கினார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் டூப் போட்ட வியர்வை சட்டையை போட்டுக்கொண்டு படம் முழுக்க நடித்து பட குழுவை கையெடுத்து கும்பிடச் செய்தார். அந்த பெருந்தன்மை கமலிடம் இல்லை. கமலின் பிறந்தநாள் அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் ரசிகர்கள் ஒருவர் கூட அவர் கை குலுக்க வில்லை, அந்த அளவிற்கு சுத்த பத்தமும் ஆச்சாரமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பேச்சு மட்டும் பிரமாதமாய் இருக்கும்.