வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சுகர் வந்து அவதிப்பட்ட 5 பிரபலங்கள்.. 26 வயதிலேயே சமந்தாவிற்கு ஏற்பட்ட சர்க்கரை நோய்

5 Celebrities Suffered From Diabetes: உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்த நீரிழிவு நோயால் 5 திரை பிரபலங்கள் அவதிப்பட்டு இருக்கின்றனர். அதிலும் சமந்தா 26 வயதில் சுகர் வந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அமிதாப் பச்சன்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப் பச்சன 33 வருடத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தில்  இணைந்து நடிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. 80 வயதை கடந்தும் அமிதாப் பச்சன் இன்னும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். 70களில் திரையுலகை கலக்கிக் கொண்டிருந்த அமிதாப் பச்சனும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.

அது மட்டுமல்ல அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட ஆக்சிடென்டால் மண்ணீரல் சிதைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சாவின் விளிம்பு வரை சென்ற அமிதாப் பச்சன் உடல் நலம் தேறி இப்போது நலமுடன் இருக்கிறார். இருப்பினும் சுகருக்காக அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

கமல்: 69 வயதாகும் உலகநாயகன் கமலஹாசன் தன்னை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்து கொள்வதில் மிக கவனமாக இருப்பவர். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வழக்கமாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதிலும், யோகா பயிற்சியில் ஈடுபடுவதிலும் தவற மாட்டார். இதனால் இவருக்கு ஏற்பட்ட நீரிழிவு நோய் இப்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் கமல் மது அருந்துதலை தவிர்த்து சுகரை கண்ட்ரோல் ஆக வைத்துக் கொண்டிருக்கிறார்.

சுதா சந்திரன்: பிரபல நடிகையும் நடன கலைஞருமான சுதா சந்திரன் தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர். தனக்கு நீரிழிவு நோய் இருப்பதை மிக வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் தனது உணவு பழக்கவழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வு முறை மாற்றங்களால் அவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்.

Also Read: செட்டாகாத வில்லி கேரக்டரில் மொக்கை வாங்கிய 5 நடிகைகள்.. சிரிப்பு மூட்டிய சிம்ரன்

நீரிழிவு நோயால் அவதிப்பட்ட பிரபலங்கள்

ராணா டகுபதி: பாகுபலி படத்தில் முரட்டு வில்லனாக நடித்த ராணா டகுபதி திடீரென்று உடல் எடை குறைந்து மெலிந்து போனார். உடற்பயிற்சியால் தான் உடல் எடையை குறைத்து இருக்கிறார் என நினைத்திருக்கையில், அவருக்கு சுகர் ஏற்பட்டதால் தான் உடல் எடை குறைந்து இருக்கிறார். அதன் பின் சுதாரித்துக் கொண்ட ராணா, பின்பு தனது உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியால் இப்போது சுகரை கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். 

சமந்தா: தென்னிந்திய முன்னணி நடிகையாக ரவுண்டு கொட்டிக் கொண்டிருந்த சமந்தாவிற்கு 2013 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 26 தான். 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

கல்யாணத்திற்கு முன்பிருந்தே சமந்தாவிற்கு சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. இவர் ஆரோக்கியமான டயட், குறைந்த கலோரி உணவு முறை, உடற்பயிற்சி, யோகா, சரியான இடைவெளியில் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது ஆகியவற்றால் சுகரை கண்ட்ரோலாக வைத்திருக்கிறார். இது பத்தாது என்று சமீபத்தில் சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

Also Read: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. அம்மாடியோ! கமலுக்கு ஜோடியாக நயன்தாரா கேட்ட 3 மடங்கு சம்பளம்

Trending News