சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

6 படம் நடித்தும் பிக் பாஸ் மாயாவுக்கு கெஸ்ட் ரோல் தான்.. குடிமிபிடி சண்டை போட்டும் வேஸ்ட் பீஸ்

BiggBoss-7 Maya’s 6 Guest Role Movies :  மதுரையை சொந்த ஊராக கொண்ட மாயா தற்போது பிக் பாஸில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ரூல்ஸ் பிரேக் பண்ணுவது மைக் மாட்டாமல் திரிவது என தில்லாலங்கடி வேலைகள் பல செய்து பிக் பாஸ் இன் மண்டையை கழுவி விடுகிறார்.  சில சமயங்களில் பிக் பாஸ், மாயா மைக்க மாட்டுங்க என திரும்பத் திரும்ப ஆர்டர் போட வைத்து அவரையே டயர்ட் ஆக்கி விடுகிறார் இந்த மாயா. யார் இந்த மாயா இவரின் பின்னணி என்ன?

தியேட்டர் கட்ட வேண்டும் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் மற்றும் கமலுடன் இண்ட்ராக்ட் பண்ண வேண்டும் என்றும்  பலவித நோக்கங்களோடு பிக் பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார் . மாயா ஜிம்னாஸ்டிக்கில்  நேஷனல் அத்லெட் பிளேயர் என்பது பலரும் அறியாத ஒன்று. ஆரம்ப காலங்களில் சினிமாவில் பல இடங்களில் வாய்ப்பு தேடி தேடிய மாயா, டைரக்டர் வெற்றிமாறனுக்கே கால் பண்ணி வாய்ப்பு கேட்டு இருக்காங்க.

ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய வானவில் வாழ்க்கை என்ற திரை படத்தின் மூலம் ஸ்டூடன்ட் ஆக அறிமுகமானார். அடுத்து தொடரி படத்தின் கிளைமாக்ஸ் இல்  ரிப்போட்டர் ஒருவராக வருவார். மகளிர் மட்டும் மற்றும் வேலைக்காரன் படத்தில் சிறு சிறு வேடங்களில் அவர் தோன்றியுள்ளார்.

Also read: பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு

லெஸ்பியன் உறவை மையமாகக் கொண்ட மாயாவின் My son is Gay என்ற படம் நிறைய பிலிம் பெஸ்டிவல் இல்  திரையிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் 3BHK  வெப்சீரிஸ் மற்றும் Montage போன்ற ஷார்ட் ஃபிலிமில் நடித்துள்ளார்

ரஜினி மற்றும் கமல்  உடன் மாயா: ரஜினியுடன் எந்திரன் 2.0 படத்தின் முதல் சீனில் ஸ்டூடண்டாக வருவார். அடுத்து இவரை லோகேஷ் கனகராஜ் விக்ரமில் விலை மாது கேரக்டரில் அறிமுகப்படுத்தினார்.  அனைவரும் இவரை யார் என்று தேடும் விதத்தில் விக்ரமில் இவரின் நடிப்பு அமைந்தது.

இவர் இல்லாத பிக் பாஸ் செவன் நினைத்துப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இவரின்  அட்டூழியங்கள் பார்க்க முடியாவிட்டாலும் மக்கள் யாரும் அவரை வெளியேற்ற நினைக்கவில்லை. அனைவராலும் strong கண்டஸ்டண்ட் என்று ஒத்துக் கொள்ளும் படியாக தனது வியூகங்களை  கெத்தாக அரங்கேற்றி வருகிறார்.

Also read: தீர விசாரிப்பதே மெய்.. சோலியை முடிக்க வரும் பிரதீப், பின்வாங்கும் ஆண்டவர்

Trending News