ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அதிக கடன் சுமையால் வெளிவராமல் தத்தளிக்கும் 4 படங்கள்.. மரண அடி வாங்கும் சிவகார்த்திகேயன்

4 films that will not be released: சில நடிகர்கள் என்னதான் பல படங்களில் தொடர்ந்து நடித்தாலும் ஒரு சில படங்களை அவர்களால் சரியான நேரத்தில் ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வருகிறார்கள். அதுவும் பண பிரச்சினை காரணமாக கடன் மேல் கடன் வாங்கி ஈடு கட்ட முடியாமல் படங்களை ரிலீஸ் பண்ண முடியாமல் இருக்கிறது. அப்படி என்னென்ன படங்கள் கடன் சுமையால் வெளிவராமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகார அறிவுப்பின்படி தொடங்கிய படம் தான் துருவ நட்சத்திரம். இதில் ரிது வருமா, ஐஸ்வர்ய ராஜேஷ், சத்யராஜ், சிம்ரன், ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாதம் 24 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார்.

ஆனால் மறுபடியும் ரிலீஸ் பண்ணுவதற்கு பண பிரச்சினை காரணமாக இருப்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டார்கள். கிட்டத்தட்ட 60 கோடியில் இப்படம் கடன் பட்டு இருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகின படம் தான் நரகாசுரன். இப்படமும் கிட்டத்தட்ட ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆன நிலையிலும் நிதி நெருக்கடியால் படத்தை வெளியிட முடியாமல் இருக்கிறது.

Also read: தனுஷ், விக்ரம் படத்த தியேட்டர்ல வர விடல.. தயாரிப்பாளரின் முகத்திரையை கிழித்த பிரபல இயக்குனர்

இன்னும் சொல்ல போனால் இப்படத்தில் நடித்ததற்காக அரவிந்த்சாமிக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. அதனால் அரவிந்த்சாமி டப்பிங் கூட பேச மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படமும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் வெளிவர முடியாமல் தவிக்கிறது. இவர் நடித்த அயலான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணி விடலாம் என்று நினைத்திருந்தார்கள்.

ஆனால் இன்னும் சில வேலைகள் இருப்பதால் மறுபடியும் கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே தற்போது சிவகார்த்திகேயன் பெயர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது. இப்பொழுது படமும் இழுப்பறியில் இருப்பதால் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு பரிதாப நிலையில் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பாக்ஸர் படம் சில ஆண்டுகளாகவே படப்பிடிப்பை முடிக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அருண் விஜய்க்கு கடன் பிரச்சினை தலைக்கு மேலே இருக்கிறது. இதில் இந்தப் படமும் ரிலீஸ் ஆகாமல் இழுப்பறையில் இருக்கிறது. இப்படி அதிக கடன் சுமையால் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் இந்த நான்கு படங்களும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

Also read: அருண் விஜய்யால் அசிங்கப்பட்ட இயக்குனர்.. கொஞ்சம் நெஞ்ச இமேஜையும் டேமேஜ் செய்த தயாரிப்பாளர்

Trending News