செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குடிகார அங்கிள் கமல், கோபத்தில் பொங்கிய பூர்ணிமா.. இந்த வாரம் சோலியை முடிக்க போகும் பிக்பாஸ்

Biggboss 7: ஏண்டா இந்த பிக்பாஸுக்கு வந்தோன்னு கமல் நொந்து போற சீசன் இதுவாக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அவர் இதன் மூலம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறார். அதில் அவருடைய இமேஜை கெடுத்த ஒரு விவகாரம் என்றால் பிரதீப்பின் ரெட் கார்டு சர்ச்சை தான்.

அதற்கு அவர் தன்னிலை விளக்கம் கொடுத்து பிரச்சினையை ஒரு வழியாக முடித்து வைத்தார். ஆனாலும் அவரை சுசித்ரா உள்ளிட்டவர்கள் படுமோசமாக விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே இருக்கும் பூர்ணிமாவும் இணைந்துள்ளார்.

எப்போதும் இந்த கூட்டத்திற்கு கமலின் ஆதரவு இருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களாக அது இல்லாதது பூர்ணிமாவை உறுத்திக் கொண்டே இருந்தது. கமல் சார் ஏன் அப்படி பேசினார் என மாயாவிடம் அவர் புலம்பியதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் கடந்த வாரம் தொண்டை அடைத்துக் கொண்டு விட்டது என அவர் கூறியதை கமல் செம நக்கல் அடித்தார்.

Also read: பிரதீப்புக்கு மாயா கட்டம் கட்டியது இப்படித்தான்.. வசமாக கமலுடன் சிக்கிய ஆதாரம்

அந்த கோபத்தை பூர்ணிமா இப்போது வெளிப்படையாக காட்டி இருக்கிறார். அதாவது அவர் இந்த விவகாரத்தை பற்றி விக்ரமிடம் ஆதங்கத்தோடு பேசி இருக்கிறார். அதில் குடிகார அங்கிள் என ஒரு வார்த்தையை விடுகிறார். இதுதான் இப்போது அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

இது நிச்சயம் கமலின் ஈகோவை தூண்டிவிடும். அப்படி பார்த்தால் கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. இந்த வாரம் பூர்ணிமாவின் சோலியை முடிக்க பிக்பாஸ் இந்நேரம் சரியான திட்டத்தை போட்டிருப்பார். இதில் யோசிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது.

கமல் பூர்ணிமாவை இப்படி கிண்டலடிப்பதை பார்த்த கூல் சுரேஷும் அவ்வப்போது நக்கலாக இதை சொல்கிறார். அந்த கடுப்பில் தான் பூர்ணிமா இருக்கும் இடத்தை மறந்து இப்படி ஒரு வார்த்தையை விட்டுள்ளார். ஆக மொத்தம் அக்ஷயா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமா வாண்ட்டடாக வண்டியில் ஏறி இருக்கிறார்.

Also read: ஜோவிகாவை காப்பாற்ற தீயாக வேலை செய்யும் வத்திகுச்சி.. மட்டமான வேலைக்கு விளக்கு பிடிக்கும் பிக்பாஸ்

Trending News