பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்யும் அட்டூழியங்கள்.. ஆண்டவரே உங்க அரசியலை எங்க கிட்ட காட்டுறீங்களே!

Kamal Haasan: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொகுப்பாளர் கமலஹாசன் என்றதும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியை சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான் தொகுத்து வழங்குவது தான் அதற்கு காரணம் அவருக்கு மிகப்பெரிய அளவில் சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது.

சம்பளம் மற்றும் புகழ் என்பதை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார். நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட போது எந்த அளவுக்கு கமல் வரவேற்கப்பட்டாரோ அதே அளவுக்கு தற்போது மக்களிடையே விமர்சனத்தையும் பெற்று இருக்கிறார். ஏழாவது சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததிலிருந்து கமல் பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆகிவிட்டது.

கமல் செய்யும் அட்டூழியங்கள்

கமல் ஒரு தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை கையாண்டு இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. அவர் முடிவெடுக்கும் இடத்திலும் நான் தான் இருக்க வேண்டும் என்று அதிக தலையீடு காட்டியதுதான் பெரிய பிரச்சனை. டி ஆர் பி கொடுக்கும் ஒருவரை சேனல் உள்ளே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில் நான் சொல்றதை நீங்க செய்யுங்க என்று ரெட் கார்டு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

அதேபோன்று ஒவ்வொரு சீசனிலும் ஆறு முதல் ஏழு போட்டியாளர்களை கமல் தான் தேர்வு செய்கிறாராம். சினேகன், பவா செல்லதுரை, ஆரி அர்ஜுன், மாயா போன்றவர்கள் எல்லாம் கமலின் சிபாரிசில் உள்ளே வந்தவர்கள் தான். சமீபத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்திருக்கும் அர்ச்சனாவை மோகன்லால் கமலிடம் சிபாரிசு செய்து உள்ளே அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

ஹவுஸ் ஆஃப் கதர் என்னும் ஆடை தொழிலை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ப்ரோமோட் செய்கிறார். அதேபோன்று நிறைய விலையுயர்ந்த புத்தகங்களையும் கமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரமோட் செய்து கொண்டிருக்கிறார். இதேபோன்று நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் சில நேரங்களில் அரசியலையும் புகுத்தி பேசுகிறார்.

பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு கமல் உடந்தையாக நடந்து கொண்டார். அதே நேரத்தில் வினுஷாவை உடல் அமைப்பை வைத்து கேலி செய்த நிக்சனை கண்டிக்கவில்லை. உருவ அமைப்பை கேலி செய்வது கலாச்சார சீரழிவாக இருந்த போதிலும் கமல் அதுக்கு குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.

 

 

 

 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →