ஆஸ்திரேலியா அணி வீரர் செய்த திமிர்த்தனம்.. உலகக் கோப்பை சர்ச்சையால் விளையாட தடை

Mitchell Marsh: 2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி இந்த முறை ஒரு போட்டியில் கூட தோற்காமல் நின்று ஆடியது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த வருடம் கிறேன்இந்தியா தான் கோப்பையை வெல்ல போகிறது என மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது.

உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு நடுவே நடைபெற்றது. ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவை உடைக்கும் வகையில் இந்தியா இந்த முறை கோப்பையை நழுவ விட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் முடியும் பொழுது இந்தியர்கள் பாதி நம்பிக்கையை இழந்து விட்டார்கள். 43 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா உலக கோப்பையை தட்டி சென்று இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலங்கிய கண்களோடு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய காட்சி எல்லோர் மனதிலுமே ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா நாடு வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தார்கள். வெற்றியை கொண்டாடுவது தவறல்ல, அதைக் கொண்டாடும் விதம் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

விளையாடுவதற்கு தடை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் மிட்செல் மார்ஷ் நடந்து கொண்ட விதம் எல்லோரையும் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டது. ஒவ்வொரு நாட்டின் மிகப்பெரிய கனவாக இருக்கும் உலக கோப்பை மீது அவர் காலை வைத்து புகைப்படம் எடுத்து பகிர்ந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை சந்தித்திருக்கிறது.

உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை வந்து தோற்று இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களை அலட்சியம் செய்வது போல் அவருடைய செயல் இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இதற்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார். மிட்செல் மார்ஷ் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்வதோடு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

உலக கோப்பையின் மீது காலை வைத்துக் கொண்டு மிட்செல் மார்ஷ் புகைப்படம் எடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியர்களின் மனதையும் புண்படுத்தி இருக்கிறது. அவர் மீது இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மிட்செல் இனி இந்தியாவுக்கு வந்து விளையாடாத அளவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த சமூக ஆர்வலர்.