சினிமா செய்திகள்

பேட்டரியே இல்லாத செல்லுக்கு டூயல் சிம் கேக்குதா.? ஜெட் வேகத்தில் வந்த SK-க்கு விழுந்த மரண அடி

ஜெட் வேகத்தில் பறந்தவர் தற்போது எழுந்திருக்க கூட முடியாமல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு வருகிறார்.

By · 27 நவ் 2023 · Updated 10 மே 2025
sivakarthikeyan-sad

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் என்னதான் சின்னத்திரையில் இருந்து வந்தாலும் வெகு விரைவிலே பல குடும்பங்களில் நம்ம வீட்டுப் பிள்ளையாக இடம் பிடித்து விட்டார். அதற்கு காரணம் இவர் நடித்த படங்களும், இவருடைய எதார்த்தமான பேச்சுக்கள் மற்றும் காமெடி கலந்த ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞர். அதனாலயே தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார்.

அப்படிப்பட்ட இவருடைய பெயர் சில மாதங்களுக்கு முன் டேமேஜ் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் இமான் அளித்த பேட்டி தான். இதைத் தொடர்ந்து இவர் இப்படிப்பட்டவர் தான் என்று பலர் யூகித்து விட்டார்கள். அதையெல்லாம் தாண்டி எப்படியாவது அடுத்தடுத்த படத்தை கொடுத்து, விட்ட இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று போராடி வருகிறார்.

பேட்டரியே இல்லாத செல்லுக்கு டூயல் சிம் கேக்குதா

அந்த வகையில் பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அயலான் படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று மும்மரமாக வேலை பார்த்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருப்பதால் இப்போதைக்கு வெளிவருவது போல் தெரியவில்லை. இதனால் பெரிய தலைவலியுடன் போராடி வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படி இந்த படம் வெளிவராமல் இருக்கும் பட்சத்தில் அதுக்குள்ள இரண்டாவது பாகத்திற்கு தயாராகி விட்டார்கள்.

ஏற்கனவே முதல் பாகம் அதிக பட்ஜெட்டுடன், ஏலியன் கதையை வைத்து எடுத்ததால் சிக்கலில் தவித்து வருகிறார்கள். இதை சரி செய்யும் விதமாக மொத்த பட குழுவும் திண்டாடுகிறார்கள். இந்த நேரத்திலேயே இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரெடி பண்ணி விடலாம் என்று கதையை தயார் பண்ணுகிறீர்கள். இதற்கு இடையில் சிவகார்த்திகேயன் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார்.

காரணம் எப்படியாவது சீக்கிரத்தில் அயலான் படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு அடுத்தடுத்த படத்திற்கு போக வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் இவரை எங்கேயும் நகர விடாமல் தொடர்ந்து பாகம் 2 என்று இவரே லாக் செய்தது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கிடையில ராஜ்குமார் பெரியசாமி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் இவரால் அடுத்த படத்திற்கு எப்படி கவனத்தை செலுத்த முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. சினிமாவிற்குள் நுழைந்து ஜெட் வேகத்தில் பறந்தவர் தற்போது எழுந்திருக்க கூட முடியாமல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு வருகிறார். ஒரு பக்கம் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வருகிறார். இன்னொரு பக்கம் இவர் கேரக்டர் பற்றி சோசியல் மீடியாவில் நாலா பக்கமும் சிதறி வருகிறது.