குணசேகரன் மூஞ்சியில் கரியை பூச போகும் ஈஸ்வரி.. சாருபாலா ஜனனி சேர்ந்து போட்ட பிளான்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை குணசேகரனின் வீட்டில் உள்ள பெண்களை அடிமையாக மட்டுமே நடத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து வியாபார எலக்ஷனில் சாருபாலாக்கு எதிராக ஈஸ்வரியை நிற்க வைத்தால் நாம் ஜெயித்து விடலாம். என்ற நம்பிக்கையில் எலக்ஷனில் ஈஸ்வரியை நிறுத்துகிறார். இவர் இந்த மாதிரி பிளான் போட்டு ஒரு பக்கம் காய் நகர்த்துகிறார்.

இன்னொரு பக்கம் இவர் வழியாகவே போய் குணசேகரன் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று ஜனனி வீட்டில் இருக்கும் பெண்களிடம் சொல்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி ஈஸ்வரி கண்டிப்பாக எலெக்ஷனில் நிற்க வேண்டும் என்று ஜனனி கூறுகிறார். ஆனால் இது உங்களுக்கு கிடைக்கிற முதல் சந்தர்ப்பம். இதை வைத்து நீங்கள் நல்ல வழியாக பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக வெற்றி உங்களுக்கு நிச்சயம் என்று ஜனனி ஊக்கப்படுத்துகிறார்.

அதன் வாயிலாக குணசேகரன் சொன்னபடி சாரு பாலாவிற்கு எதிராக ஈஸ்வரி நிற்கப் போகிறார். அதே நேரத்தில் சாறு பாலாவும் ஜனனி போட்ட திட்டத்தை தெரிந்து கொண்டு இவர்களுக்கு உதவும் வாயிலாக பிளான் பண்ணுகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனை பொருத்தவரை சாருபாலா தோற்க வேண்டும். அதே மாதிரி சாரு பாலாவும் வருகிற எலக்ஷனில் தோற்றுவிடுவார்.

Also read: பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜெயித்த பிறகு தான் உண்மையான ஆட்டத்தை குணசேகரன் பார்க்கப் போகிறார். அந்த வகையில் தற்போது குணசேகரன் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டார். ஏனென்றால் இவரை எதிர்த்து எதிலும் வெற்றி பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதனால் அவர் சொன்னபடியே போய் அதன் மூலம் யாரும் அசைக்க முடியாத இடத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் ஜனனியின் மாஸ்டர் பிளான்.

அதன்படி பொறுப்பு , அதிகாரம் கையில் வந்ததுக்கு பிறகு ஈஸ்வரி துணிச்சலுடன் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி போக முடியும். அப்பொழுது இந்த குணசேகரன் ஒன்னும் பண்ண முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். இந்த நிலைமையை உருவாக்குவதற்காக தான் ஜனனி குணசேகரன் சொல்றபடி ஈஸ்வரியை ஒத்துக்க வைத்து விட்டார்.

ஆக மொத்தத்தில் ஈஸ்வரியின் ட்ராக் ஓரளவுக்கு ஸ்ட்ராங்காக போகிறது. அடுத்தபடியாக சக்திக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி காயப்படுத்தி விட்டார். ஆனால் உண்மை என்னவென்றால் ஜனனி கர்ப்பமாக இருக்கிறார். அதை கூடிய விரைவில் சக்தியிடமும் மற்ற அக்காவிடமும் கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தப் போகிறார். இதனை அடுத்து நாடகம் எதிர்பார்த்தபடி சூடு பிடிக்கப் போகிறது.

Also read: எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி