Ameer: சினிமாவில் தனக்கென்று ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது. பல தடங்கல்களையும் போராட்டங்களையும் கடந்த பின்பே ஒருவரால் அங்கீகாரத்தை பெற முடியும். அப்படித்தான் சினிமாவிற்குள் இயக்குனராக வேண்டும் என்று ஆசையுடன் அமீர் நுழைந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக சேது மற்றும் நந்தா படங்களில் பணி புரிந்தார்.
அதன் பின்னே இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படி இயக்குனராக எடுக்கும் முதல் படத்தில் விக்ரம் நடித்தால் அமீர்க்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும் என்று ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்தார். ஏனென்றால் அந்த நேரத்தில் விக்ரம், சேது படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதனால் விக்ரமிடம் அமீர் கேட்ட பொழுது அவர் ஏற்கனவே ஜெமினி, சாமுராய், ராஜா படங்களில் கமிட் ஆகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
அடுத்ததாக விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் சரியாக அமையாததால் கடைசியில் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை எடுத்தார். அடுத்ததாக ராம் படத்தை எடுக்கும் பொழுது சூர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அப்பொழுது கஜினி மற்றும் ஆறு படத்தில் அவர் பிஸியாகி இருந்ததால் கால் சீட் கிடைக்காமல் போய்விட்டது. அதன் பின்னே ஜீவாவை வைத்து ராம் படத்தை எடுத்தார்.
அடுத்ததாக பருத்திவீரன் படத்தின் கதைக்கு அமீரின் முதல் சாய்ஸாக இருந்தது சூர்யா தான். இவர் நடித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் சூர்யா என்னுடைய தம்பி ஹீரோவாக அறிமுகமாக போகிறார். அதனால் அவரின் முதல் படத்தை நீங்கள் எடுங்கள் என்று சொல்லி பருத்திவீரன் கதையை கார்த்திக்கு மாற்றிவிட்டார்.
இதனை அடுத்து அமீர் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஆதி பகவன் திரைப்படம் ஜெயம் ரவி நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. இதற்கு ஜெயம் ரவிக்கு பதிலாக முதலில் அமீர் நடிக்க வைப்பதற்கு ஆசைப்பட்ட நடிகர் யார் என்றால் அஜித். ஆனால் அப்பொழுது அஜித் நடிக்காததால் ஜெயம் ரவி நடித்தார்.
கடைசியில் சந்தன தேவன் என்கிற படத்தில் விக்ரம் மற்றும் சூர்யாவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர்கள் யாரும் நடிக்காததால் கடைசியில் ஆர்யாவை வைத்து படத்தை எடுக்க ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. இப்படி அமீர் சில நடிகர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விஷயங்கள் நிராசையாக போய்விட்டது. ஆனால் நினைத்த நடிகர் கிடைக்காவிட்டாலும், கிடைத்த நடிகரை வைத்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
Also read: உண்மையான பச்சோந்தி யாரு தெரியுமா.? அமீர் செஞ்ச ஒரே தப்பை சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர்