ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

400 ரன்கள் சாதனையை முறியடிக்க 2 இந்திய வீரர்களால் மட்டுமே முடியும்.. லாராவே கணித்த கணிப்பு

2 Indian Cricketers only have the capability to Break Lara’s 400 Run Record: ஒரு வீரராக டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் எடுத்த சாதனை பிரைன் லாராவிடம் உள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் ஒன் அணியாக திகழும் இங்கிலாந்து அணிக்கு எதிராக லாரா இச்சாதனையை படைத்துள்ளார். 10 வருடங்களாக இந்த ரெக்கார்டை யாரும் முறியடிக்கவில்லை

மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆன்ட்டிக்குவா மைதானத்தில் லாரா 400 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல், உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனி நபரின் அதிகபட்ச இலக்கை எடுத்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கில் முதல் 3 இடங்களில் லாரா இரண்டு இடங்களை பிடித்துள்ளார். அதாவது முதல் முறையும், மூன்றாவது முறையும் அதிக ரன்கள் அடித்த பெருமையை தன் கைவசம் வைத்துள்ளார். 1994 மற்றும் 2004 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இரண்டு முறையும் ஒரே மைதானம் மற்றும் ஒரே அணிகளுக்கு எதிராக அதிகபட்ச ரண்களை அடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆன்ட்டிகுவா மைதானம், சென்ட் ஜான்ஸ் தீவில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இருமுறையும் இங்கிலாந்துக்கு எதிராக அடித்துள்ளார்.

Also Read: இலங்கை அணி மீது மொத்தமா இடியை இறக்கிய அரசாங்கம்.. இந்திய அணியால் ஏற்பட்ட விபரீத நிலமை

400 மற்றும் 375 ரன்கள். ஒன்று மற்றும் மூன்றாவது தனிநபர் இலக்கு இது. இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த மேத்யூ ஹேடன். அவர் 380 ரன்கள் ஜிம்பாவே அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு அடித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மூன்று முறை முச்சதம் அடித்தும், லாராவின் சாதனையை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் அவரே அதிரடியாக என்னுடைய 400 ரன்கள் சாதனையை முறியடிக்க அந்த 2 இந்திய வீரர்களால் மட்டும் முடியும் எனக் கூறியுள்ளார்.

எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இந்த இரண்டு வீரர்கள் என்னுடைய சாதனையை கூடிய விரைவில் அடித்து விடுவார்கள் என லாரா கூறியுள்ளார். இவர்கள் இருவரும் நேர்த்தியான ஆட்டக்காரர்கள், வயதும் குறைவு கொஞ்சம் கணித்து நின்று விளையாடினால் தனிநபராக 500 ரன்கள் அடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என வெகுவாக பாராட்டியுள்ளார்.

Also Read: ஒரு முறை கூட நோ-பால் வீசாத 3 கிரிக்கெட் வீரர்கள்.. இந்திய அணிக்கு உலக அளவில் பெருமை சேர்த்த ஜாம்பவான்

Trending News