ஆண்டவரை கோர்த்து விடும் ப்ளூ சட்டை.. அந்தர் பல்ட்டி அடிக்கும் கமல்

Kamal – Blue Sattai Maran : சென்னை மிக்ஜாம் புயல் உலுக்கு உலுக்குவது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சென்னை மக்களுக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். ஒருபுறம் அரசாங்கம் சரியாக செயல்படவில்லை என்ற கருத்தும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் ஆன கமல் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதாவது இப்போது மக்களுக்கு என்ன தேவை என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அரசை குறை கூறுவது அல்ல. மேலும் அரசு இயந்திரம் ஒரு கோடி பேருக்கும் சென்று சேர்வது சாத்தியமில்லா ஒன்று.

மேலும் சிறந்த வல்லுனர்களை இணைத்து இனிவரும் காலங்களில் மலை பாதிப்பு இல்லாதபடி எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும். மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாமும் நடக்க உள்ளதாக கமல் பதிவிட்டு இருந்தார். இதை அடுத்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2020 இல் கமல் போட்ட பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது அந்தச் சமயத்தில் மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போது கமல் ஒரு பதிவு போட்டிருந்தார். அதாவது ஒரு மணி நேர மழையால் தமிழகம் தள்ளாடுகிறது. வடகிழக்கு பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. மேலும் கடந்த வெள்ளத்தில் கற்ற பாடம் என்ன எதுவும் இல்லை வடிகாலும் வாரப்படவில்லை என ஆளும் கட்சியை விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.

அப்போது கமல் நடிகராக மட்டுமே இருந்த நிலையில் அரசியலை எதிர்த்து பதிவு போட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு கட்சியை நிர்வாகித்து வருவதால் அரசுக்கு சாதகமாக பதிவு போட்டு இருக்கிறாரா என ப்ளூ சட்டை வம்பிழுக்கும்படி இந்த பதிவை போட்டு உள்ளார். மேலும் அரசியல்வாதி ஆனவுடன் கமல் அந்தர்பல்டி அடிக்கிறாரா என்ற கமெண்ட்சும் வருகிறது.

kamal
kamal
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →