மிக்ஜாம் புயலில் விளம்பரம் தேடிய 3 பெரிய கைகள்.. பிசினஸ் மூளையோடு நயன் செய்த கேவலம்

Michaung: சாக கிடப்பவருக்கு உதவி செய்வதை கூட வீடியோ எடுத்து விளம்பரம் தேடும் அவலம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் எல்லாமே விளம்பரமாக தான் பார்க்கப்படுகிறது. இதில் கோடியில் புரளும் திரைப்பிரபலங்களும் விதிவிலக்கல்ல.

அப்படித்தான் சமீபத்தில் சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலை வைத்து பலரும் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதில் அரசியலில் மாற்றம் கொண்டுவர நினைக்கும் கமலும் விளம்பரம் தேடி இருக்கிறார். அதாவது அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சி

kamal-makkal neethi mayyam
kamal-makkal neethi mayyam

அந்த வண்டியில் கமலின் போட்டோவும் கட்சியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. எல்லாவற்றிற்கும் நீதி, நியாயம் பேசும் கமல் கூட இந்த அளவுக்கு மாறி விளம்பரம் தேடி இருப்பது ஆச்சரியம் தான். இதை விட ஒரு பெரிய கூத்தும் நடந்திருக்கிறது. அதாவது விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்கள்.

அப்போது ஒருவர் விஜய்யின் போட்டோவை கையில் பிடித்தபடி வீடியோவுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தார். அதேபோன்று ஓரமாக இருந்த குப்பையை வாரி ஓரமாக போட்டு விளம்பரம் தேடினார் புஸ்ஸி ஆனந்த். அதைப் பார்க்கவே சகிக்கவில்லை.

விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகள்

vijay-makkal-iyakkam
vijay-makkal-iyakkam

இப்படி அக்கப்போர் பண்ணும் இவர்களால் விஜய்க்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது தான் நிதர்சனம். இவர்களுக்காவது அரசியல் ஆதாயம் இருக்கிறது. ஆனால் நயன்தாரா பிசினஸ் மூளையோடு இந்த மழை வெள்ளத்தை தனது சாதகமாக்கிக் கொண்டது தான் கேவலம்.

நயன்தாரா பிசினஸ்

nayanthara
nayanthara

தற்போது நடிப்பை தொடர்ந்து பிசினஸில் ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா நாப்கின் பிசினஸை சமீபத்தில் தொடங்கி இருந்தார். அந்த நாப்கினை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நயன்தாரா இலவசமாக கொடுத்து தன்னுடைய பிசினஸுக்கு விளம்பரம் தேடி இருக்கிறார்.

அந்த வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒருவேளை நயனும் அரசியலுக்கு வர போகிறாரோ என்னவோ. ஆனால் இது எதுவும் ரசிக்கும் படியாக இல்லை. அடுத்தவர்கள் கஷ்டத்தில் விளம்பரம் தேடும் இவர்களை என்னவென்று சொல்வது.