வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பணம், புகழ் என எஸ் ஜே சூர்யா காட்டில் புரண்டோடும் வெல்லம்.. 2024இல் மான்ஸ்டர் கைவசம் உள்ள படங்கள்

Actor SJ Surya upcoming movies: அஜித்தால் டார்லிங் என செல்லமாக அழைக்கப்படும் எஸ் ஜே சூர்யா சினிமா துறையில் வந்தவுடன் வெற்றி பெற்றவர் அல்ல. எந்த ஒரு துறையிலும் பல திறமைகளை வளர்த்துக் கொண்டாலும் அதில் தடம் பதிக்க ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது. எஸ் ஜே சூர்யா வின் திறமைகளை கண்டு அவரை அடையாளப்படுத்தியவர் அஜித். இந்த ஒரு நிகழ்வை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சொல்லாமல் தவறுவதில்லை எஸ் ஜே சூர்யா.

அஜித் நடித்த வாலியின் மூலம் இயக்குனராக அடையாளம் காணப்பட்டார் எஸ் ஜே சூர்யா. தொடர்ந்து குஷி இல் விஜய் உடன் இணைந்தார். முதல் இரண்டு படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து  இயக்குனராக இருந்தவர் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் உருமாறினார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் இவர் நடித்த நியூ திரைப்படம் பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து சர்ச்சையான வசனங்களுடன் அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி  போன்ற படங்களில்   நடித்தார் எஸ் ஜே சூர்யா.

Also read: சுட சுட ரெடியான ஐந்து பார்ட்-2 படங்கள்.. வான்டடா நான் நடிக்கணும்னு எஸ் ஜே சூர்யா போட்ட போடு

தொடர்ந்து இவர் நடித்த திருமகன், இசை, வியாபாரி போன்ற படங்கள் கை கொடுக்காமல் போனதும் பிரேக் எடுத்து திரை துறையை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்தார் என்றே சொல்லலாம். பின் நண்பனில் பஞ்சவன்பாரிவேந்தன் ஆக என்ட்ரி கொடுத்தார்.  வில்லனாக விஜய்யின் மெர்சல், ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இவை இரண்டுமே இவருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்தது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் தட்டி தூக்கிவிடும் சினிமா லவ்வர் ஆன இவரின் நடிப்பு திறமைக்கு ஏற்றபடி பல முன்னணி நாயகர்கள் இவரை தங்கள் படம்களில் நடிக்க வைக்க அடம் பிடித்து வருகின்றனர்.

எஸ் ஜே சூர்யா, இந்தியன் 2 வில் உலக நாயகன் கூடவும், தனுஷின் D50 யிலும் நடித்து வருகிறார். மேலும் கவின் நடிக்கும் ஒரு படத்தில் முக்கியரோலில் எஸ் ஜே சூர்யா கமிட் செய்யப்பட்டு மைசூரில் சூட்டிங் நடந்து வருகிறது. தொடர்ந்து  பிரதீப் ரங்கநாதனின்  அடுத்த படமான எல்ஐசி யில் முக்கிய கேரக்டரில் வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அடுத்த ஆண்டு நிறைய படங்களில் எஸ் ஜே சூர்யாவை தரிசிக்கலாம் என ரசிகர்கள் உற்சாகமாக ட்வீட் போட்டு வருகின்றனர்.

Also read: 2023 இல் வசூலில் 600 கோடி கடந்து சாதனை படைத்த 5 படங்கள்.. ஜெயிலரை மிஞ்சிய பதான்!

Trending News