சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு.. திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறும் ஆண்டவர்

Kamal Quits Biggboss 7:  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதுகெலும்பே கமல் தான். முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரை அவர் நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் மிகவும் சுவாரசியமானது. அதனாலயே வார இறுதி நாள் எப்போது வரும் என காத்துக் கிடந்த ரசிகர்களும் உண்டு. அப்படி ஒரு ஆளுமை கமலிடம் இருந்தது.

ஆனால் இந்த சீசனை பொருத்தவரை அது காணாமல் போனது தான் ஆச்சரியம். இந்த அளவுக்கு ஆண்டவர் மாறுவார் என்று அவருடைய ரசிகர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் அவருடைய அரசியல் தந்திரம் தான். ஆனால் அதுவே இப்போது ஆட்டம் கண்டு விட்டது.

ஏனென்றால் இப்போதைய பிக் பாஸ் சீசனில் அவர் மாயா உட்பட சிலருக்கு ஆதரவாக மட்டுமே ஆதரவாக செயல்படுகிறார். பல பிரச்சனைகளில் நடுநிலைமையாக தீர்ப்பு கூறுவது கிடையாது. அதிலும் பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தில் இவர் நடந்து கொண்டது ஒருதலை பட்சம் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

Also read: இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 6 பேர்.. பிக்பாஸ் துரத்தி விடப்போவது இவரையா.?

ஆனால் எதிர்ப்பலைகள் கிளம்பியதும் தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் அவர் பார்த்தார். அப்போது கூட இந்த பிரச்சனையை முழுமையாக விசாரிக்கவில்லை. அதேபோன்று பிக் பாஸ் வீட்டில் நடந்த பல அட்டூழியங்களை இவர் கண்டும் காணாமல் விட்டுவிட்டார். மேலும் பிக் பாஸ் மேடையை அரசியல் களத்திற்காக மட்டுமே அவர் முழுமையாக உபயோகிக்க தொடங்கி விட்டார்.

அதனாலயே சம்பந்தம் இல்லாமல் பேசுவது, கைதட்டலுக்காக உளறுவது என இவருடைய போக்கு கடும் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவருக்கான ஆடியன்ஸ் சப்போர்ட் முற்றிலும் குறைந்துவிட்டது. இப்படி சோத்துலயும் அடி வாங்கி சேத்துலயும் அடி வாங்கிய கதையாக மாறி இருக்கிறது ஆண்டவரின் நிலை.

அதன்படி அவர் இனிமேலும் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது என நிகழ்ச்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக ஷாக்கிங் தகவல் தீயாக பரவி வருகிறது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் புது பிக்பாஸ் தொகுப்பாளரை நாம் எதிர்பார்க்கலாம்.

Also read: மனித கடிகாரமாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ஃபினாலே டிக்கெட்டை வெல்லப்போவது யார்.?