ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இதெல்லாம் நாங்க சீசன் 1-லயே பார்த்தாச்சு.. பிக்பாஸ் பரணி போல தப்பிக்க வானரம் போல் தொங்கிய பூமர்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமே இல்லை என ஆண்டவரே சொல்லிவிட்டார். இதனால் என்ன செய்வது என யோசித்த விஜய் டிவி டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கை இந்த வாரம் கொண்டு வந்தது. அதில் போட்டியாளர்கள் மனித கடிகாரமாக மாறி விளையாடினார்கள்.

அதைத்தொடர்ந்து இன்று டான்ஸ் மாரத்தான் நடக்க இருக்கிறது. இப்படி கொஞ்சம் கலகலப்பாக செல்லும் நிகழ்ச்சியில் இன்று தரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது சீசன் 1ல் பரணி பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பிக்க சுவரை பிடித்து தொங்கி ஷாக் கொடுத்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் இப்போது பூமர் அங்கிள் கூல் சுரேஷ் தொங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சில வாரங்களாகவே இவருக்கு வீட்டு ஞாபகம் அதிகமாக இருக்கிறது. அதை கமலிடம் கூட அவர் வெளிப்படையாக சொன்னார். ஆனாலும் இவர் ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also read: நாட்டாமை தீர்ப்பு அவருக்கே ஆப்பு.. கமலை ஓரங்கட்டி பிக்பாஸை நடத்த 5 பிரபலங்களுக்கு வலை வீசும் விஜய் டிவி

இந்த சூழலில் வீட்டில் இருக்கும் அக்கப்போரை தாங்க முடியாமல் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வானரம் போல் சுவற்றை பிடித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறார். ஆனால் பாவம் அவரால் ஏறவும் முடியல இறங்கவும் முடியல. பரிதாபமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதை பார்த்த மணி எப்படியோ அவரை பிடித்து கீழே இறக்கி விட்டார். இதை பார்க்கும் போதே ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் சிரிப்பு தான் வருகிறது. பிக் பாஸை பற்றி முழுசாக தெரியாமல் மாட்டிக் கொண்ட கூல் சுரேஷ் இப்போது தப்பிக்கும் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் பரணி போல தொங்கிய கூல் சுரேஷ்

bharani-cool suresh
bharani-cool suresh

இதை பார்த்த ஆடியன்ஸ் இதையெல்லாம் நாங்க சீசன் 1லயே பாத்துட்டோம். விஜய் டிவி வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க என கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு இது பக்கா ஸ்கிரிப்ட் போல் தெரிகிறது. எது எப்படியோ கூல் சுரேஷ் இந்த அளவுக்கு வித்தை காட்டி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் எப்படியும் இந்த வாரம் அவர் வெளியேறி விடுவார்.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் குழப்ப கேஸ்.. பரபரப்பாக நடக்கும் ஓட்டிங்

Trending News