செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

3 ஹீரோக்களுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்.. மாஃபியா கும்பலுடன் செய்யப்போகும் தரமான சம்பவம்

Actress Shruti Haasan new film update: உலக நாயகன் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் கிளம்பிவிட்டார். இப்போது ஸ்ருதிஹாசனுக்கு லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்து ரவுண்டு கட்ட காத்திருக்கிறார்.

கேஜிஎப் படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ வெளியானது. இதற்கு ஸ்ருதிஹாசன் தான் குரல் கொடுத்திருக்கிறார். இதில் யாஷ் வித்தியாசமான கெட்டப்பில் துப்பாக்கியுடன் மிரட்டுகிறார்.

அது மட்டுமல்ல இந்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாக பரவுகிறது. ‘டாக்ஸிக்’ என்பதுதான் இந்த படத்தின் டைட்டில். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Also Read: அழகுக்காக சர்ஜரி செய்து பொம்மை போல் மாறிய 5 நடிகைகள்.. ஆபத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை

ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்

இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளனர். படத்தில் யாஷ் மட்டுமல்ல இன்னும் இரண்டு முன்னணி ஹீரோக்களும் இணைகின்றனர். சர்வதேச ட்ரக் மாஃபியா கும்பலுடன் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். இந்த படத்தில் சாய் பல்லவியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் இருக்கும் பிற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இதன் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்து வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல்10ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Also Read: வித்தியாசமான காரணங்களால் ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்.. உலகநாயகன் மகளுக்கு இப்படி ஒரு அசிங்கமா?

Trending News