திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

Vijay to Dominate Rajini: சினிமாவை பொறுத்தவரை யார் எப்படி மாறுவார்கள் என்று தெரியாது. கீழே உள்ளவர்கள் மேலே வருவதும், மேலே உள்ளவர்கள் கீழே போவதும் நடக்கும் இயல்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் தற்பொழுது விஜய், அஜித் என்ற போட்டி காணாமல் போனது. தற்பொழுது விஜய், ரஜினி என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பல வருடங்களாகவே யார் என்ற போட்டி தொடர்ந்து வருகிறது. இதில் விஜய், அஜித் இரண்டு பேரும் ஒரு காலத்தில் ஆசைப்பட்டதாக பேசப்பட்டது. அஜித் விலகிக் கொண்டார் விஜய் விடாப்பிடியாக இருந்து அந்த இடத்தை அடைந்தார். ஆனால் அதில் பல கெட்ட பெயர்களையும் வாங்கி வருகிறார். அதற்கு தகுந்தார் போல் ரஜினியும் இவரை மையப்படுத்திய படத்தில் காட்சிகளை வைத்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க சத்தம் இல்லாமல் த்ரிஷாவும் வளர்ந்து வருவது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வயதிலும் ஹீரோயினாக முன்னணி நாயகர்களுடன் நடித்து வருகிறார். இவரது ஒரே ஆசை தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் தற்போது வந்து விட்டார் ஆனால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவருக்கு வரவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அதற்கான வேலைகளில் அமைதியாக வேலை பார்த்து வருகிறார் திரிஷா.

Also Read : தலைவனுக்கு உண்டான தகுதியை இழந்த விஜய்.. 48 மணி நேரம் கழித்து வெளியான அறிக்கையால் வெடித்த சர்ச்சை

விஜய் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஆசைப்பட்டு அடைந்து வருவதும், இன்னொரு புறம் த்ரிஷா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய அவர் செய்யும் வேலைகளும் ஏதோ ஒரு சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இருவருமே அமைதியாக இந்த வேலைகளை செய்யும் பொழுது இவர்களுக்குள் ஏதோ ஒரு கூட்டணி இருப்பது போலே தோன்றுகிறது. திரிஷா விஜயுடன் மீண்டும் சேர்ந்து அதனால் விஜய் மனைவி சண்டை போட்டு பிரிந்து இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இவர்கள் கூட்டணி போடுவது சினிமாவில் இவர்கள் இரண்டு பேரும் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும். அப்படியே இருந்து கொண்டு விஜய் 2026 இல் ஆரம்பிக்கும் அரசியல் கட்சியை வளர்த்து விடலாம். சில வருடங்களுக்கு முன்பு விஜய் கட்சியில் திரிஷா இடம் பெற்று முக்கிய பதவியை வாங்குவார் என்று சில தகவல்கள் வந்தன. அதை தற்பொழுது இவர்கள் செய்யும் வேலையை பார்த்தால் உண்மை என்று தோன்றுகிறது.

என்னதான் நம்பர் ஒன் இடத்திற்கு இவர்கள் வந்தாலும் அந்த பட்டத்தை வாங்க முடியாது. அடுத்து இவர்கள் ஒன்றாக அரசியலில் சேர்ந்து இருக்கப் போவது உறுதியாக தெரிகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இடத்தை இவர்கள் நிரப்ப போகிறார்களா, இல்லை மற்றவர்கள் குறை சொல்லும் அளவிற்கு மாற போகிறார்களா என்பது காலம் தான் முடிவு செய்யும். திரிஷாவுக்கும் வேறு வழியில்லை இப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் தான் வயதான காலத்தில் மக்கள் மனதில் இருக்க முடியும் என்பதை நினைத்து இந்த வேலையை செய்து வருகிறார். அப்போ அடுத்த ஜெயலலிதா இவங்க தானா.

Also Read : நடிப்பே வராத விஜய்யை நடிக்க வைத்து தூக்கி விட்ட 3 இயக்குனர்கள்.. தளபதிக்கு திருப்புமுனை படங்கள்

Trending News