Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் செய்யும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் வேட்டை நாயாக இருந்து வாலாட்டியது கதிர் தான். குணசேகரன் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்பி எதிர்க்கே நிற்பவர்களை தாறுமாறாக வேட்டையாடி விடுவார். அதன் விளைவு தற்போது கால் கை உடைந்து நடமாட முடியாமல் இருக்கிறார்.
கட்டின புருஷன் நல்லவனோ கெட்டவனோ அவருக்கு ஒரு ஆபத்து என்றதும் துடிதுடித்து போயி பரிதவிப்பது மனைவியாக தான் இருக்கும். அதனால்தான் கதிரின் நிலைமையை பார்த்து மொத்தமாக நந்தினி உடைந்து போய்விட்டார். இந்த சூழ்நிலையிலும் கதிர் கொஞ்சம் கூட திருந்தாமல் நந்தினி மற்றும் மகளை உதாசீனப்படுத்துகிறார்.
இதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத நந்தினி ஆவேசத்தின் உச்சகட்டமாக கோபத்தை காட்டுகிறார். இந்த நேரத்தில் குணசேகரன், கதிரை பார்த்து பாசம் இருப்பது போல் பாசாங்கு காட்டுகிறார். அப்பொழுது நந்தினி அவர் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு முக்கிய காரணமே நீங்கதான். தம்பியாகவும் பாக்கல, ஒரு மனுசனாகவும் பார்க்கல உங்களுடைய வேட்டை நாயாகத்தான் அவரை பயன்படுத்தினீர்கள்.
அதனால் தான் அவர் செஞ்ச தப்பு தற்போது இவருக்கு வினையாக வந்திருக்கிறது என்று நந்தினி குணசேகரனை பார்த்து ஆவேசமாக பேசுகிறார். அத்துடன் ஜனனியும் வழக்கம்போல் வாய்க்கு வந்தபடி வாயாலேயே வடை சுடுகிறார். இதை பார்த்து கொந்தளித்துப் போன குணசேகரன் அவர்களை வெளியே விரட்டி விடுகிறார். ஆனால் கதிர் இந்த நிலைமையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் குணசேகரன் தான்.
அதாவது குணசேகரன் எலக்ஷனில் நிற்கிறார். அந்த வகையில் கண்டிப்பாக இவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக செய்த சூழ்ச்சி. எப்படியாவது தேர்தலில் ஜெயித்து விட வேண்டும். அத்துடன் ஜனனிடம் சவால் விட்ட மாதிரி ஜெயித்த பின் அந்த வீட்டில் உள்ள பெண்களை மறுபடியும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து அடிமையாக வேண்டும் என்பதுதான் போட்ட சவால்.
அதை நிறைவேற்றுவதற்கு பகடைக்காயாக கதிரை யூஸ் பண்ணிக்கிட்டார். அதாவது கதிரை அடித்து விட்டு மொத்த பழியையும் எஸ்கேஆர் அல்லது ஜீவானந்தத்தின் மீது போட போகிறார். இதனால் ஓட்டு போடற அவர்களும் பாவப்பட்டு குணசேகருக்கு சப்போர்ட் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் இந்த ஒரு விஷயத்தால் சக்தியை எப்படியாவது மீண்டும் தன் பக்கத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று கணக்குப் பண்ணி குணசேகரன் இந்த மாதிரி மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்.