ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பேய்கிட்ட இருந்து தப்பிச்சு பிசாசுட்ட மாட்டிக்க விருப்பமில்லை.. விவாகரத்தை கூலாக டீல் செய்யும் சன் டிவி நடிகை

Sun Tv Actress: இப்போதெல்லாம் கல்யாணம், விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் நடிப்புத் துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டு போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றனர்.

இதில் சின்னத்திரை, பெரிய திரை என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அப்படித்தான் சன் டிவி நடிகை ஒருவரும் தனக்கு விவாகரத்து ஆகிவிட்ட செய்தியை ரொம்பவும் கூலாக சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

அதன்படி மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான கிருத்திகா பாண்டவர் இல்லம் உட்பட ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு சில வருடங்களுக்கு முன்பே விவாகரத்து நடந்து விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

Also read: குணசேகரனின் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்த எக்ஸ் காதலி.. எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும் எதிர்நீச்சல்

இதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதனாலேயே ரசிகர்கள் இப்போது உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த விவாகரத்து நடந்ததாக கிருத்திகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி இதனால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. பில்லர் போல் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். என் அம்மா, அண்ணன் குடும்பத்தினருடன் நான் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இரண்டாம் திருமணம் குறித்தும் அவர் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஒரு பேயிடம் இருந்து தப்பித்து பிசாசு கிட்ட மாட்டிக்க நான் விரும்பவில்லை. இந்த வாழ்க்கை எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. என் மகனும் அப்பாவுடன் இல்லை என்ற ஏக்கம் இல்லாமல் இருக்கிறான். அந்த அளவுக்கு என் அண்ணன் குடும்பத்துடன் நான் ஒற்றுமையாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். அந்த வகையில் விவாகரத்து நடந்த வருத்தத்தை கூட கூலாக சொல்லும் கிருத்திகாவின் தைரியம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also read: புற்று நோயினால் போராடிய எதிர்நீச்சல் நடிகை.. குணசேகரன் மருமகளுக்கு இப்படி ஒரு மறுபக்கமா.?

Trending News