செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சோலோ ஹீரோயின் கதையா.? உடனே ஓகே சொல்லும் 5 நடிகைகள், நயன் மார்க்கெட் கம்மியானதால் வந்த விளைவு

Nayanthara: ஹீரோவே இல்லாமல் ஒரு நடிகை படம் நடித்து, தியேட்டர் புல்லாக ஆடியன்ஸ்களை உட்கார வைக்க முடியும் என்றால் அது நயன்தாராவுக்கு மட்டும்தான் சாத்தியம். மாயா, அறம், இமைக்கா நொடிகள் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நயன்தாராவுக்கு இப்போது மார்க்கெட் கொஞ்சம் டல்லாக இருக்கிறது. இதனால் இதுபோன்ற சோலோ ஹீரோயின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு, நாங்கள் இருக்கிறோம் என கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஐந்து நடிகைகள்.

சோலோ ஹீரோயின் ஆக நடிப்பதற்கு ரெடி ஆகும் 5 நடிகைகள்

பூஜா ஹெக்டே: நிறைய அழகி போட்டிகளில் பரிசு வென்ற பூஜா ஹெக்டே முதலில் நம்பி வந்தது தமிழ் சினிமாவை தான். அவர் நடித்த முகமூடி படம் அந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்த போது மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். இப்போது பூஜா ஹெக்டே கால் சீட்டிற்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கிறார்கள். தனிக்கதாநாயகியாக நடிப்பதில் விருப்பம் இருப்பதாக இயக்குனர்களுக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா: எந்த அளவுக்கு ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு அதிகமான ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடித்த அனிமல் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடைபெறும் இவர் தனி கதாநாயகியாக நடிப்பதற்கும் ஆயத்தமாகி வருகிறார்.

Also Read:விடாமுயற்சியை ஓரம் கட்டிட்டு சென்னை திரும்பிய திரிஷா.. நிற்க நேரமில்லாமல் பறப்பதற்கு காரணம் இதுதான்

த்ரிஷா: நடிகை திரிஷா ஏற்கனவே தமிழ் சினிமாவில் நயன்தாராவின் இடத்தை பிடித்து விட்டார். இருந்தாலும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்து வரும் இவருக்கு, நயன்தாராவுக்கு இணையாக சோலோ ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்று விட வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. இதற்காக தொடர்ந்து கதைகளை கேட்டு வருகிறார்.

சாய் பல்லவி: கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பெயரை டேமேஜ் ஆக்கிக் கொள்ளாமல் தெளிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார் சாய் பல்லவி. ஏற்கனவே கார்கி படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களுக்கு காண்பித்து விட்டார். இதை தொடர்ந்து மீண்டும் தனிக்கதாநாயகியாக நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார்.

சமந்தா: நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பொழுது அதே அளவுக்கு தெலுங்கு சினிமாவில் ரீச் பெற்றவர் தான் சமந்தா. அவர் நடித்த யசோதா படம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த சாகுந்தலம் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோயினாக நடிக்க கதை கேட்டு வருகிறார்.

Also Read:நன்றியே இல்லாமல் அமீரை அசிங்கப்படுத்திய திரிஷா.. சூர்யாவுடன் நடிப்பதற்காக பச்சோந்தியாக மாறிய குந்தவை

Trending News