நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் கூட்டு சேர்ந்த வில்லன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கெத்தாக ஓவர் அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டு வந்த குணசேகரன் தற்போது நாளா பக்கமும் தோற்றுக் கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் விஷயமாக ஈஸ்வரியை எலக்ஷனில் இருந்து வாபஸ் வாங்க சொல்லியும் காது கொடுத்து கேட்காமல் எதிர்த்து எலக்ஷனில் நிற்பது தான் குணசேகரனுக்கு விழுந்த முதல் அடி.

அடுத்ததாக ஆதிரை, குணசேகரன் முகத்தில் கறியை பூசும் விதமாக கரிகாலனை தூக்கி எறிந்து விட்டு அருணை தேடி எஸ்கேஆர் வீட்டுக்கு தஞ்சம் அடைந்து விட்டார். அடுத்ததாக தன்னுடைய வேட்டை நாயாகவும், அல்ல கையாகவும் பயன்படுத்திய கதிர் தற்போது எந்த பயனும் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கும்படி கை காலில் அடிபட்டு விட்டது.

இதனை தொடர்ந்து கரிகாலன் மற்றும் தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணிய குணசேகரன் இந்த விஷயத்திலும் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். இப்படி படிப்படியாக தோற்றுவரும் குணசேகரனுக்கு தற்போது புது வில்லன் உடன் கூட்டணி ஆகப்போகிறது. அதாவது ஜனனி குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட மெய்யப்பன், அவரை எப்படியாவது ஒழித்து கட்ட வேண்டும் என்று முடிவுக்கு வந்து விட்டார்.

Also read: புற்று நோயினால் போராடிய எதிர்நீச்சல் நடிகை.. குணசேகரன் மருமகளுக்கு இப்படி ஒரு மறுபக்கமா.?

அதனால் அவருடைய அண்ணன், குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் என்னுடைய எதிரியை ஜனனி தான் என்று அனைவரது முன்னாடியும் சொல்கிறார். அதற்கு குணசேகரன் உங்க ரேஞ்சுக்கு எல்லாம் இவ எல்லாம் ஒரு எதிரியா என்று நக்கலாக பேசுகிறார். ஆக மொத்தத்தில் எதிரிக்கு எதிரி நண்பனாக குணசேகரனும் மற்றும் மெய்யப்பன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஜனனியை காலி பண்ண போகிறார்கள்.

ஆனாலும் இந்த விஷயத்தில் இவர்கள் தான் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்கள். காரணம் ஜனனி மற்றும் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு பக்க பலமாக இன்னொரு விஷயம் நடக்கப் போகிறது. அதாவது கதிர் தற்போது இந்த நிலைமையில் இருப்பதால் நந்தினி மற்றும் மகள் தாரா, கதிரை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மனது மாறிக்கொண்டே வருகிறது. கல் மனசிலும் ஒரு ஈரம் இருக்கு என்பதற்கு ஏற்ப கதிர் உடைய கண்ணீர் துளிகளில் தெரிகிறது. அதனால் கண்டிப்பாக கூடிய விரைவில் எது சரியான விஷயம், எப்படி இருக்க வேண்டும் என்று புத்தியுடன் இனி கதிர் நடந்து கொள்ளப் போகிறார். அதனால் அண்ணனை எதிர்த்து அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு சப்போர்ட்டாக நிற்பார்.

Also read: டோட்டலா டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்.. சன் டிவி குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் வெறித்தனமான போட்டி