இன்னைக்கு தான் எனக்கு தீபாவளி.. காஜி நிக்சன் வெளியேறுவதை கொண்டாடும் அப்பா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதி கட்ட பரபரப்பில் இருக்கிறது. ஆனாலும் யார் டைட்டிலை வெல்வார்கள் என்ற ஒரு குழப்பம் ஆடியன்ஸ் மத்தியில் இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரவீனா, நிக்சன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் நிக்சன் வெளியேறுவதை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆடியன்ஸ் மட்டுமல்லாமல் வேறு ஒருவரும் இந்த நாளை தீபாவளி போல் கொண்டாட காத்திருந்தார்.

அதன்படி நிக்சனால் கடும் அவப்பெயரை சந்தித்த ஐஷு இப்போது வரை வெளியில் தலை காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவர்களுடைய குடும்பத்தினரும் எந்த அளவுக்கு மனவேதனை பட்டார்கள் என்பதை ஐஷுவின் ஒரே ஒரு பதிவு நமக்கு தெளிவாக காட்டியது.

Also read: மாயா, கமலுக்காக விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. பிக்பாஸை விட்டு வெளியேறும் பலி ஆடு, ஓட்டிங் லிஸ்ட்

அந்த வகையில் தற்போது ஐஷு அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரி பலரையும் கவர்ந்துள்ளது. அதில் அவர் ஸ்பைடர் பட எஸ் ஜே சூர்யா மற்றவர்களின் கதறலை ரசிப்பது போல் இருக்கும் ஒரு வீடியோவை போட்டுள்ளார்.

அதில் நான் ஒரு காரணத்திற்காக இதை கொண்டாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். எந்த அளவிற்கு அவர் மன வேதனைப்பட்டு இருந்தால் இப்படி ஒரு பதிவை போட்டு இருப்பார். அதைத்தான் ஆடியன்சும் தற்போது கூறி வருகின்றனர். அதன்படி பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தவர்களில் அடுத்த இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Also read: நிக்சனைப் போல் விதியை மீறிய மணி.. கண்டுக்காமல் போன பிக்பாஸ், காரணம் இதுதான்