Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 95 நாட்களை நெருங்கி விட்ட நிலையில் டைட்டிலை யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதன்படி தற்போது மிஞ்சி இருக்கும் எட்டு போட்டியாளர்களின் இத்தனை நாள் சாதனைகள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.
அர்ச்சனா: வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் வந்த இவர்தான் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் இதுவரை அவர் செய்த சாதனைகள் என்று குறிப்பிட்டு சொல்லும் படியாக எந்த விஷயமும் இல்லை. அதாவது இந்த 67 நாட்களில் கேப்டன், கோல்ட் ஸ்டார், டிக்கெட் டு பினாலே போன்ற எதிலும் அவர் ஜெயிக்கவில்லை. ஆனால் ஆறு முறை நாமினேஷன் வந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
தினேஷ்: வைல்ட் கார்டு போட்டியாளரான இவர் 67 நாட்களில் இரண்டு முறை கேப்டனாக இருந்திருக்கிறார். அதேபோல் ஏழு முறை நாமினேஷன் வந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார். மேலும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் 4 மதிப்பெண்களும், ஒரு கோல்டு ஸ்டாரும் பெற்றுள்ளார்.
மணிச்சந்திரா: 95 நாட்களில் இவர் ஒரு முறை கேப்டனாக இருந்திருக்கிறார். அந்த வாரம் மிகவும் கலகலப்பாக இருந்தது. அதே போல் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் ஆறு பாயிண்டுகளும், கோல்டு ஸ்டார் மூன்றும் பெற்றுள்ளார். அதேபோல் எட்டு முறை நாமினேஷன் வந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
Also read: 12 லட்சம், ஆசை காட்டும் பிக்பாஸ்.. தடுமாறும் ஹவுஸ் மேட்ஸ், பணப்பெட்டியை தூக்கியது இவர்தான்
விசித்ரா: பிக்பாஸ் வீட்டின் தெய்வத்தாயாக இருக்கும் இவர் 9 முறை நாமினேஷன் வந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல் 2 கோல்டு ஸ்டார், டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் 3 பாயிண்ட் பெற்றிருக்கிறார். ஆனால் கேப்டனாக இருந்தது கிடையாது.
மாயா: விஷ பாட்டிலாக இருக்கும் இவர் ஒருமுறை கேப்டனாக இருந்துள்ளார். இரண்டு கோல்டு ஸ்டார், டிக்கெட் டு பினாலே பாயிண்ட் 4ம் பெற்றிருக்கிறார். அதேபோல் ஆறு முறை நாமினேசன் வந்து ஆண்டவர் தயவால் காப்பாற்றப்படும் இருக்கிறார்.
பூர்ணிமா: மாயாவின் கூட்டாளியான இவ்வாறு இரண்டு முறை கேப்டனாக இருந்திருக்கிறார். மேலும் ஒரு கோல்டு ஸ்டார், டிக்கெட் டு பினாலே பாயிண்ட் 4ம் பெற்றிருக்கிறார். அதே போன்று ஏழு முறை நாமினேஷனிற்கு வந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்.
விஷ்ணு: டிக்கெட் டு ஃபினாலே வின்னரான இவர் பத்து பாயிண்ட்டுகளைப் பெற்றார். மூன்று கோல்ட் ஸ்டார்களை பெற்ற இவர் ஒரு முறை கேப்டன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் நான்கு முறை நாமினேஷனிற்கு வந்து தப்பித்து இருக்கிறார்.
விஜய் வர்மா: எல்லோ ஸ்ட்ரைக் கார்டு வாங்கி வெளியேற்றப்பட்ட இவர் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஒருமுறை கேப்டனாக இருந்த இவர் மூன்று முறை நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் ஐந்து முறை ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்.
இப்படியாக இந்த எட்டு போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.