ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாதி கூட நிறையல, காத்து வாங்கிய இருக்கைகள்.. ரஜினி, கமல் வந்தும் வெறிச்சோடி போன கலைஞர் 100

Kalaignar 100: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், கமல், ரஜினி, நயன்தாரா, சூர்யா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனாலும் விழாவில் பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. அது தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .அதாவது அந்த மைதானம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் நபர்கள் உட்காரும் அளவுக்கு பெரிதானது.

அதில் 20 ஆயிரம் நபர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பாதி கூட இல்லாமல் அந்த இடமே காத்து வாங்கியது தான் பரிதாபம். அதன்படி மொத்தமே 699 இருக்கைகள் தான் நிரம்பியதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: கலைஞர் 100 விழாவுக்கு ஆஜரான ரஜினி கமல்.. சென்னையில் இருந்துக்கிட்டே புறக்கணித்த அஜித், விஜய்

இது இப்போது வைரலாகி வரும் நிலையில் விஜய், அஜித் ரசிகர்களும் இதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அதாவது அவர்கள் இருவரும் வராத காரணத்தினால் தான் கூட்டம் கூடவில்லை என அவர்கள் இதை ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் உச்ச நடிகர்களான ரஜினி, கமல் இருந்தும் கூட இந்த நிகழ்வு கலை கட்டாமல் போயிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பல நடிகர்கள் இன்னும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்து வெளிவரவில்லை.

ஒருவேளை ஒட்டு மொத்த திரை உலகமும் திரண்டு இருந்தால் நிச்சயம் அந்த அரங்கமே அதிர்ந்திருக்கும். ஆனால் பல நடிகர்கள் உள்ளூரில் இருந்து கொண்டு இதில் கலந்து கொள்ளவில்லை. அதனாலேயே இந்த நிகழ்வு பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என்ற ஒரு கருத்தும் இப்போது எழுந்துள்ளது.

Also read: குளிர் ஜுரத்தை சுட்டெரித்த சூரியன்.. மாஸ் ஹீரோவை கதிகலங்க செய்த கலைஞர்

Trending News