Ameer – Surya: இந்த ஆண்டின் இறுதியில் பருத்திவீரன் பட சர்ச்சை மிகப்பெரிய அளவில் சினிமா உலகத்தை உலுக்கியது. இயக்குனர் ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியால் இயக்குனர் அமீர் கொதித்து எழுந்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பருத்திவீரன் பட சமயத்தில் அவருடன் பணிபுரிந்த சசிகுமார், சமுத்திரகனி போன்ற குரல் எழுப்ப, ஞானவேல் ராஜா பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார்.
பருத்திவீரன் படம் நடிகர் கார்த்திக்கு தமிழ் சினிமாவில் முதன் முதலில் அஸ்திவாரம் போட்டது. இன்று வரை கார்த்திக்கின் பெரிய அடையாளமாக இருப்பது அந்த படம் தான். இருந்தாலும் அந்த படத்தைப் பற்றிய சர்ச்சை கிளம்பிய போது கார்த்தி வாயை திறக்கவே இல்லை. இதனாலேயே கார்த்தி தொடங்கி, சூர்யா, சிவகுமார் என அத்தனை பேர் மீதும் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகி கொண்டே இருந்தது.
Also Read:சூதாட்டத்தில் இறங்கிய சூர்யா.. ஜோதிகா மீது கடுப்பில் இருக்கும் சிவக்குமார்
இதற்கிடையில் சிவகுமார், கார்த்தி, சூர்யா மூவரும் கேப்டன் விஜயகாந்த் சமாதிக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இந்த பருத்திவீரன் சர்ச்சையை ஏற்கனவே மறக்காத மக்கள் இது கூட நாடகம் தான் என நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். பருத்திவீரன் சர்ச்சையை கார்த்தி அல்லது சூர்யா தானாக முன்வந்து முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் கருத்தாக இருந்தது.
அமீர் சூர்யா சந்திப்பு
நடிகர் சூர்யா தான் அதற்கான முழு முயற்சியை தற்போது எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழா கொண்டாட்டத்தில் இயக்குனர் அமீர் மற்றும் சூர்யா இருவருமே நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித மனஸ்தாபமும் இன்றி இருவரும் ஆரத் தழுவிக் கொண்டு, தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி இருப்பது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்திருக்கிறது.
பருத்திவீரன் சர்ச்சை சமயத்திலேயே வெற்றி மாறன் அவருடைய வாடிவாசல் படத்தை முக்கியமான கேரக்டரில் அமீரை நடிக்க வைக்க இருப்பதாக சொல்லியிருந்தார். இப்படி ஒரு சர்ச்சையான நேரத்தில் சூர்யா தன்னுடைய படத்தில் அமீரை நடிக்க வைக்க எப்படி ஒத்துக் கொள்வார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சமயத்தில் வெற்றிமாறன், அமீரை நேரில் சந்தித்து கதை டிஸ்கஷனையும் முடித்து விட்டதாக சொல்லி இருந்தார்.
அமீருடன் இருக்கும் கருத்து வேறுபாடால் கண்டிப்பாக வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஒரு நல்ல நடிகனாக, ஒரு நல்ல இயக்குனராக இரண்டு பேரும் எடுத்திருக்கும் முடிவு பாராட்டுத்தக்கதாகத்தான் இருக்கிறது. விரைவில் அமீர் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read:ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா