Sivakarthikeyan-Ayalaan: சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கிய அயலான் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக கிடப்பில் கிடந்தது. அதை தற்போது தூசி தட்டி ரிலீசுக்கு தயார் செய்த பட குழு மீண்டும் ஒரு பிரச்சனையை சந்தித்துள்ளது.
இதனால் திட்டமிட்டபடி நாளை அயலான் வெளியாகுமா? என்ற ஒரு பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு அயலான் தனுஷின் கேப்டன் மில்லருக்கு போட்டியாக நாளை வெளியாக உள்ளது. அதற்கான பிரமோஷனில் பட குழு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அயலான் படத்திற்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் படம் வெளியாகக் கூடாது என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ளனர். அதன்படி கிட்டத்தட்ட 85 கோடி ரூபாய் கடன் தொகை இருக்கிறதாம். அதில் தயாரிப்பாளரின் மற்ற கடன்களும் சேர்ந்து இருக்கிறது.
இதையெல்லாம் திருப்பி செலுத்தாமல் படம் வெளியாக முடியாது என்று சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து புதன்கிழமை இரவிருந்து இப்படத்திற்கான பஞ்சாயத்து பேசப்பட்டு வருகிறது. இதனால் அயலான் ரிலீஸ் ஆவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனாலும் சிவகார்த்திகேயன் எப்படியும் படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்ற முடிவில் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறாராம். தற்போது பேச்சுவார்த்தை அனைத்தும் சுமூகமாக முடியும் தருவாயில் இருக்கிறது. மேலும் இன்று மாலைக்குள் அனைத்தும் சரி செய்யப்பட்டு நாளை திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தன்னுடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்த சிவகார்த்திகேயன் இப்போது கடன் தொகைக்கான உத்திரவாதத்தையும் கொடுத்துள்ளாராம். அதன்படி கடைசி நிமிடம் வரை படத்தை தாங்கிப் பிடிக்கும் சிவகார்த்திகேயன் அயலானை மலை போல் நம்பி இருக்கிறார். டாக்டர் பட ரிலீசின் போதும் இதே போன்ற ஒரு பிரச்சனை வந்தது குறிப்பிடத்தக்கது.