வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

விஜய் சேதுபதியின் ஹீரோ மார்க்கெட்டுக்கு வந்த ஆப்பு.. சொங்கி போன மெரி கிறிஸ்துமஸ் வசூல்

Vijay Sethupathi: சினிமாவில் ஜெய்ப்பதற்காக பல வருடங்கள் கஷ்டப்பட்டு சரியான நேரம் அமைந்து முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக சட்டென வளர்ந்து வந்தவர் தான் விஜய் சேதுபதி. வியாபாரம் என்பதை தாண்டி சினிமாவை வித்தியாசமாக கையாள வேண்டும் என்ற நோக்கத்தில், புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருகிறேன், கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன், பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக தன்னை முன்னிறுத்துகிறேன் என நிறைய விஷயங்களை செய்து இப்போது மொத்தமாக சொதப்பி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அஜித் மற்றும் விஜய் போன்ற டாப் ஹீரோக்களை தாண்டி இருக்கும் முன்னணி இடங்களை தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் போன்றோர் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் திடீரென விஜய் சேதுபதி வில்லன் அவதாரம் எடுத்தபோது அது நல்ல வரவேற்பை தான் பெற்றது. ஆனால் தொடர்ந்து சில படங்களில் அவரை வில்லனாக பார்ப்பதற்கு நமக்கு சலிப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

இந்த விஷயத்தை புரிந்து கொண்ட விஜய் சேதுபதி, மெரி கிறிஸ்துமஸ் பட விழாவில் இனி நான் வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன். வில்லன் ரோல்களில் நடிக்க ஆரம்பித்ததால் என்னுடைய ஹீரோ மார்க்கெட் பாதிக்கப்படுகிறது என்று பேசி இருந்தால். தவறான நேரத்தில், சரியாக ஒரு விஷயத்தை புரிந்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முடிவு, கண் கெட்ட பிறகு நமஸ்காரம் எதுக்கு என்று தான் நம்மை யோசிக்க வைத்திருக்கிறது.

Also Read:Merry Christmas Movie Review- ஒரே இரவில் நடக்கும் ரோலர் கோஸ்டர் மர்மங்கள்.. விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் எப்படி இருக்கு.? விமர்சனம்

விஜய் சேதுபதி தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, பார்சி என்னும் வெப் தொடரின் மூலம் பாலிவுட்டுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஜவான் படத்தில் ஷாருக்கானின் வில்லனாக மிரட்டி இருந்தார். அந்தாதூண் என்னும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைப் உடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார்.

சொங்கி போன மெரி கிறிஸ்துமஸ் வசூல்

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டு ரொம்பவும் தைரியமாக பொங்கல் ரேசில் இணைந்தது. சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் விஜய் சேதுபதியால் மோத முடியவில்லை என்பது அப்பட்டமாக இந்த படத்தின் மூலம் தெரிந்து விட்டது. பான் இந்தியா படமாக இருந்தும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 2.5 கோடி தானாம்.

இது விஜய் சேதுபதியின் ஹீரோ மார்க்கெட் மிகப்பெரிய அளவில் சரிந்து இருப்பதை அப்பட்டமாக தெரியப்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அடுத்தடுத்து பொங்கல் விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படத்தின் வசூலில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இனியாவது விஜய் சேதுபதி நிலைமையை புரிந்து கொண்டு சரியான முடிவெடுத்தால் விட்ட இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read:கத்ரீனா கைஃப் உடன் லிப்லாக், அமங்களப்படுத்தும் விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர்

Trending News