Ayalaan VS Captain Miller: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துள்ளது. இந்த முறை சிவகார்த்திகேயன் தன்னை சினிமாவில் வளர்த்துவிட்ட தனுஷ் உடனே நேருக்கு நேர் மோதிக்கிறார். இதில் அயலன் படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இப்போது வெளியாகி இருக்கும் ரிபோட்டில் எந்த படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியாகி மூன்று நாட்களில் 40 கோடியை கடந்து விட்டது. இதற்குக் காரணம் அந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் முதல் நாளிலிருந்து கிடைப்பதால், நாளுக்கு நாள் அதன் வசூலும் எகிறுகிறது. இதை தெரிந்து கொண்ட தியேட்டர் உரிமையாளர்களும் கேப்டன் மில்லர் படத்திற்கு தான் அதிக காட்சிகளை ஒதுக்குகின்றனர்.
தனுஷின் கேப்டன் மில்லர் படம், சென்னையில் இருக்கும் திரையரங்குகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் மட்டும் 114 ஷோ திரையிடப்படுகிறது. குடும்ப ஆடியன்ஸிங் ஃபேவரிட் படமாக பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் ஏலியன் கான்செப்டில் வெளியாகி இருக்கும் அயலான் படத்திற்கு 94 ஷோ கொடுக்கப்பட்டுள்ளது.
Also Read: பொங்கல் ரேஸில் வென்றது யார்? கேப்டன் மில்லர், அயலானின் 2ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்
அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டது, எந்த படத்திற்கு?
இது தவிர பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கு 24 ஷோ ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹனுமான் படத்திற்கு 23 ஷோ இன்று மட்டும் கொடுத்துள்ளனர். சென்னையில் இருக்கும் பெரும்பாலான திரையிடங்குகளில் அதிகப்படியான கேப்டன் மில்லர் படத்துருக்கு தான் அதிக காட்சி கொடுக்கப்பட்டிருப்பதால், இந்த வருஷம் பொங்கல் தனுஷுக்கு தான் தரமாக இருக்கப் போகிறது.
இருந்தாலும் சிவகார்த்திகேயனும் சளைத்தவர் கிடையாது. வெறும் 20 காட்சிகள் தான் கம்மியாக அயலான் படத்திற்கு ஒதுக்கி உள்ளனர். தற்போது அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு தான் வசூலில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பொங்கல் ரேசின், இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் தனுஷ்.. இணையத்தை கலக்கும் பேமிலி புகைப்படம்