திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குப்பையில் போட சொன்ன ஆர்ஜே பாலாஜி.. 6 கோடி கொடுத்து வாங்கிய தொலைக்காட்சி

RJ Balaji : ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடைசியாக வீட்ல விசேஷம் படம் வெளியானது. அதன் பிறகு அவரது நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் இப்போதும் அவர் மீது உள்ள ஈர்ப்பு ரசிகர்களுக்கு குறையவில்லை. அடுத்ததாக ஐசாரி கணேஷ் தயாரிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், ஆரம்பத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தை குப்பையில் தூக்கி போட சொல்லி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

அதாவது இந்த படத்தின் இயக்குனர் கோகுல் மற்றும் ஆர்ஜே பாலாஜிக்கு ஆரம்பம் முதலே ஒத்துவராமல் ஏகப்பட்ட பிரச்சனை போய்க்கொண்டிருந்தது. இதனால் தயாரிப்பாளர் ஐசாரி கணேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் தலைவலியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது.

Also Read : பிரமாதம்! சிங்கப்பூர் சலூனை வைத்து சக்க போடு போடும் ஆர் ஜே பாலாஜி டிரைலர், லோகேஷ் என்ட்ரி செம

இதை அடுத்து சண்டை முத்தி போனதால் கோபத்தில் ஆர்ஜே பாலாஜி இந்த படம் வேலைக்கு ஆகாது குப்பையில் தூக்கி போடுங்க என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்து விட்டனர். இப்போது கலைஞர் தொலைக்காட்சி சிங்கப்பூர் சலூன் படத்தை 6 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

மேலும் டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தியேட்டரிலும் வசூலை அள்ளும் என்று கூறப்படுகிறது. ஆர் ஜே பாலாஜி, கோகுல் பிரச்சனையில் படம் என்ன ஆகுமோ என்று பயந்த ஐசாரி கணேஷ் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். மேலும் சிங்கப்பூர் சலூன் படம் வருகின்ற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read : வேல்ஸ் பிலிம்ஸால் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. ஒரு வழியாக ஆர்ஜே பாலாஜிக்கு பிறந்த விடிவுகாலம்

Trending News