சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் பண்ணிய பெரிய துரோகம்.. ஈசல் பூச்சி மாறி மாட்டும் பெண்கள்

Tennis player Sania Mirza’s ex-husband cricketer shoaib malik married Actress sana javed: ஆறு  கிராண்ட் ஸ்லாம்களை வென்று உலக அளவில் புகழ்பெற்ற இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.  20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இளம் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த வெற்றி நாயகி சானியா மிர்சா வாழ்விலும் சோக கதைகள் ஏராளம்.

எல்லை தாண்டிய இவர்களது கவித்துவமான காதல் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சோனியா மிர்சா 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து கரம் பிடித்தார். அவர்களுக்கு இஷான் என்ற மகன் ஒருவர் உள்ளார். காதலாவது கத்திரிக்காயாவது என கடந்த சில மாதங்களாக  சானியா மிர்சா மற்றும் அவரது கணவர் சோயிப் மாலிக் காரசாரமான விவாதத்துடன் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை நிரூபிக்கும் வண்ணம் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை திருமணம் செய்து புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.  சனா ஜாவித்தும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: கள்ளத் தொடர்பினால் பிரியும் காதல் ஜோடி.. 12 வருடங்களுக்கு பின் முறியும் சானியா மிர்சா திருமண வாழ்க்கை

இவர்களுடைய பழக்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது என்றும் இதுவே சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக்கின் பிரிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஆரம்பித்த இவர்கள் பழக்கம், இவர் வந்தால் மட்டுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன் என்று சோயிப் மாலிக்கை அடம்பிடிக்க வைத்தது.

ஏற்கனவே சோயிப் மாலிக் அவர்கள், தனது ரசிகையான ஆந்திராவைச் சேர்ந்த  ஆயிஷாவை திருமணம் செய்து டெலிபோன் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தார். பின்பு சானியாவை திருமணம் செய்தார்.  பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் சானியா மிர்சா தானாக முன்வந்து மாலிக்குக்கு ரிவிட் அடிக்கும் வகையில் தொலைபேசி மூலம் மூன்று முறை “குலா” என்று சொல்லி விவாகரத்து செய்தார்.

சுதந்திர பறவையாய் மீண்டும் மூன்றாவதாக சனா ஜாவித்தை திருமணம் செய்து உள்ளார் சோயிப் மாலிக். இதற்கு சோயப் மாலிக்கின் குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர்களது திருமணத்தில் பங்கேற்க வில்லையாம். வடிவேலு காமெடி ல வர்ற மாதிரி உனக்கு  இவன் எத்தனை யாவது? ரெண்டாவது.  உனக்கு  இவள் எத்தனையாவது? மூணாவது என்ற பரஸ்பர சிந்தனையுடன் முற்போக்காக வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.

Also read: தன்னை தானே கலாய்த்து போட்டோ, ஸ்டேட்டஸ் பதிவிட்ட சானியா மிர்சா.

Trending News