Star Cricketers ruled out of England Series: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. நடந்து முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து 28 நாட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணிக்கு இப்பொழுது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பர்சனல் காரணங்களுக்காக விலகிக் கொண்டார். அவர் கடைசி 3 போட்டிகளுக்கு அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டி ஆந்திராவில் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்குகிறது.
ஏற்கனவே முதல் போட்டியை தோற்ற நிலையில் இப்பொழுது இந்திய அணியில் இருந்து இரண்டு நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். அவர்கள் இருவரும் இந்த தொடரில் இருந்து விலகி இருப்பது அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி
கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர். இருவருக்கும் மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்ப்ராஸ் கான் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மூன்று முக்கிய நட்சத்திர வீரர்கள் ஆகிய விராட் கோலி, கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி அணியை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக சமாளித்து விடுவார்கள் எனவும், எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது எனவும் முன்னாள் வீரர்கள் அனைவரும் கூறுகின்றனர்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதியும் இறுதி மற்றும் ஐந்தாவது கடைசி டெஸ்ட்போட்டி மார்ச் 7ஆம் தேதியும் நடக்கவிருக்கிறது. இங்கிலாந்த அணி பங்குபெறும் நீண்ட டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தகுதியுள்ள 5 நட்சத்திர வீரர்கள்.. யோசிக்கும் படி செய்த வயது