49 வயதில் நக்மாவிற்கு வந்த கல்யாண ஆசை.. பாட்ஷாவின் காதலிக்கு இருந்த நிஜமான 4 எக்ஸ் காதலர்கள்

Actress Nagma has fallen in love with Four celebrities: தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை நக்மா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாட்ஷா படத்தில் ஜோடியாக நடித்த அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி, தற்போதும் பேசக்கூடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையில் இளமை ததும்பும் வயதில் நக்மாவிற்கு 4 பேருடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் கழட்டிவிட்டார். ஆனா இப்போது 49 வயதாகும் நக்மா, இவ்வளவு நாள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

சரத்குமார்: ரகசிய போலீஸ், ஜானகிராமன், அரவிந்தன் போன்ற படங்களில் சேர்ந்து நடித்த சரத்குமார் மற்றும் நக்மா இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர். இதற்காக சரத்குமார் நக்மாவிற்கு ஈசிரில் ஒரு பெரிய பங்களாவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதன் காரணமாகவே நக்மாவும் தனது குடும்பத்தை பார்க்க பெங்களூர் செல்வதை தவிர்த்து வந்திருக்கிறார். அதன் பின் ராதிகாவுடன் சில படங்களில் சேர்ந்து நடித்த சரத்குமார், அவருடன் நெருக்கம் காட்டியதால் நக்மா சரத்குமாருடன் இருந்த காதலை பிரேக் அப் செய்து கொண்டார்.

பிரபுதேவா: காதலன் படத்தில் ஜோடி சேர்ந்த பிரபுதேவா- நக்மா இருவருக்கும் திரை மறைவிலும் காதல் மலர்ந்தது. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

நக்மா காதலித்து கழட்டி விட்ட நான்கு பிரபலங்கள்

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்: தெலுங்கில் வெளியான சூப்பர் போலீஸ் என்ற படத்தில் வெங்கடேஷ் மற்றும் நக்மா இருவரும் சேர்ந்து நடித்தனர். அதன்பின் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு கொஞ்ச நாள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர், பின்பு பிரிந்து விட்டனர்.

கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி: 2000 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த சௌரவ் கங்குலி நடிகை நக்மாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இவர்களைப் பற்றி தான் அந்த சமயத்தில் நாலா பக்கமும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கொஞ்ச காலம் கங்குலி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு அதன் பின் நக்மா தான் அவரை கழட்டி விட்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →