ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

செல்வராகவன் இயக்கத்தில் சோடைப்போன ஐந்து பட சம்பாத்தியத்தையும் தொலைத்த பகாசுரன் பீமராசு

Kollywood Director selvaraghavan hit, flop and upcoming movies: தமிழ் சினிமாவில் ஆயிரம் இயக்குனர்களுக்கு மேல் இருந்தாலும் தனி ஒருவனாக தனது வித்தியாசமான சிந்தனையின் மூலம் திரைக்களம் அமைத்து கதையை மெருகேற்றுவதில் இந்த இயக்குனருக்கு இணை இல்லை. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஐந்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. சிந்தனைகளின் வழியே உணர்வினை கடத்தி ரசிகர்களை  மெய்மறக்க செய்து விடுவார் இயக்குனர் செல்வராகவன்.

தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமையில் செல்வராகவன் திரைக்கதை எழுதி திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இயக்குனராக அவதாரம் எடுத்த செல்வராகவன் தமிழ் திரை உலகம் கையாளாத தனித்துவமான திரை கதையை இயக்குவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

காதல் கொண்டேன்: செல்வராகவனின் கேரியரில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்படுத்தியது தனுஷின் காதல் கொண்டேன். தனது காதல் நிறைவேறாது என்ற உடன் காதலுக்காக அல்ல! காதலிக்காக உயிரை விட துணிந்தான் நாயகன் இப்படத்தை பார்த்த கமல் அவர்கள் இதே மாதிரி கிளைமாக்ஸ் நான் குணா படத்துல வச்சிருக்கலாமோ என்று செல்வராகவனின் திரைக்கதை பாராட்டி பேசினார்.

Also read: சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

7ஜி ரெயின்போ காலனி: நீ எல்லாம் எங்க உருப்பட போற என்று வசைப்பாடிய தந்தையை கொண்டாட வைத்ததோடு காதலின் சந்தோஷத்தையும் சோகத்தையும் ஒரு சேர வெளிப்படுத்திய திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன்.

புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வெளிவந்த புதிதில் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் கல்ட் கிளாசிக்காக திரைக்கதையை உணர்ந்தபின்  பின்னால் கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். தற்போது இந்த இரண்டு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

திரைக்கதையில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் இன்றி  தன்னுடைய சிந்தனையை கடத்த முற்ப்படும் தனித்துவமான இயக்குனராக இருந்த செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்களின் மூலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். மேலும் நடிகனாக பகாசுரன் படத்தில் தான் சம்பாதித்து இருந்த நற்பெயரை தொலைத்தார் என்ற விமர்சனம் ரசிகர்கள் இடையே பரவியது.

ஆயிரம் இருந்தாலும் கலைஞனுக்கு அழிவில்லை என்பது போன்று சினிமா காதலனான செல்வராகவன் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தான் இயக்கிய படங்களின் இரண்டாம் பாகத்தை நம்பி செகண்ட் இன்னிங்ஸ்க்கு தயாராகி விட்டார்.  இவர் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்!

Also read: இயக்குனராக அடிமேல் அடி வாங்கும் செல்வராகவன்.. அதிரடியாக நிறுத்தப்பட்ட 7G படப்பிடிப்பு

Trending News