ஷாருக்கானை வெறுப்பேத்தி விட்ட தயாரிப்பாளர்.. விழி பிதுங்கி நிற்கும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan’s Ayalan release suspended in Andhra Pradesh: பொங்கலுக்கு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த படம் சிவகார்த்திகேயனின் அயலான். இந்த படத்தை நம்பி சம்பளம் கூட வாங்காமல் நடித்திருந்தார் எஸ் கே. தனது சினிமா கேரியரில் முக்கிய படமாக இருக்கும். குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு ப்ரோமோஷன் செய்திருந்தார் எஸ் கே.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகிபாபு, கருணாகரன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர் இப்படத்தில் முக்கியமாக கருதப்படும் ஏலியன் கேரக்டர் மற்றும் அதற்கான கிராபிக்ஸ் பணிகளை சாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் அபாரமாக செய்து இருந்தது.

சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஏதாவது பிரச்சனை தலை தூக்கி ரிலீஸை தடுக்கும். பல எதிர்ப்புகளுக்கு இடையில் “பொங்கலுக்கு அயலான் வருவான்!” என்று தான் சொன்னதை சாதித்துக் காட்டினார் சிவகார்த்திகேயன். ஆனால் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றி பெறவில்லை அயலான். கேரளா மற்றும் வெளிநாட்டில் திரையிடப்பட்டிருந்த இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.

அடுத்ததாக  தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசை கட்டி நின்றதால் பொங்கலுக்கு நம்ம சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆவது தாமதமானது. சரி பொங்கல் முடிஞ்சிடுச்சு, இப்பவாவது ஆந்திராவுல ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சா ரிலீஸ் பண்ண விடாம ஷாருக்கான் தடுக்கிறார். காரணம் கிராபிக்ஸ் பணிகள் செய்த ரெட் சில்லி நிறுவனத்திற்கு வைத்த கடன் பாக்கியே ஆகும்

அயலான் ப்ரொடியூசர்  கே ஜே ராஜேஷ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் வந்தா தான் ரிலீஸ் ஆகும். ப்ரொடியூசர் சும்மா இல்லாமல் ஹாஸ்பிடல்ல இருந்துகொண்டே  ட்விட்டர்ல “குட் ஜாப் சாருக்கான்” என நக்கலாக சொல்லி உள்ளார். எரியுற தீயில எண்ணைய ஊத்துற மாதிரி” ஷாருக்கானை வெறுப்பேத்தி உள்ளார் தயாரிப்பாளர். இதனால் கோபமடைந்த ரெட் சில்லி  நிறுவனத்தினர் காசை தராமல் காப்பியை கொடுக்க மாட்டோம் என்று தெலுங்கில் அயலான் ரிலீஸ் பண்ணுவதை தடை செய்து உள்ளனர்.

ஏற்கனவே அயலான் வெளியிட்டுக்கு முன் தயாரிப்பாளர் அவர்கள் கேப்டன் மில்லரை வம்புக்கு இழுத்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் சிவகார்த்திகேயன் இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கையெடுத்து கும்பிட்டார். தெலுங்கில் அயலான் பட வெளியீட்டிற்காக பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார் சிவகார்த்திகேயன் இப்போது அவரது ஆசை மண்ணாகி போனது. அது மட்டுமல்லாமல் அயலான் 2 என்ற  கனவு, கனவாகி போனது நிஜமாக சாத்தியம் இல்லை.