MGR – Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் இருந்து எப்போதுமே அரசியலை தனியாக பிரித்து விட முடியாது. சினிமாவில் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத நியதி. ரசிகர்களின் ஆதரவை நம்பி இங்கு கட்சி ஆரம்பித்தவர்கள் அதிகம். அதில் எம் ஜி ஆர் ஐ தவிர இதுவரை யாருமே பெரிதாக வெற்றியை பார்க்கவில்லை. இதுவரை தமிழகத்தில் சொந்த கட்சி ஆரம்பித்த 11 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
கட்சி ஆரம்பித்த 11 நடிகர்கள்
எம்ஜிஆர்: திமுக கட்சிக்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஆரம்பித்த சொந்த கட்சி தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு இந்த கட்சியை ஆரம்பித்தார். அதிலிருந்து அவர் இறக்கும் வரை அந்தக் கட்சி வெற்றியை மட்டுமே பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தது நம்மில் பலருக்கும் தெரியாது. அவர் 1989 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்னும் கட்சியை தொடங்கினார். தற்போது இந்த கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.
பாக்யராஜ்: நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் எம்ஜிஆரின் பக்தனாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். எம்ஜிஆருக்கும் பாக்கியராஜ் ரொம்பவும் பிடிக்கும். 1989 ஆம் ஆண்டு பாக்யராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்தார்.
டி.ராஜேந்தர்: தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட கலைஞர் ஆக இருப்பவர் தான் டி ராஜேந்தர். இவர் 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ன கட்சியை ஆரம்பித்தார்.
விஜயகாந்த்: கேப்டன் விஜயகாந்த் கடந்த 25 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரானார். சரியான நேரத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்திருந்தால் முதலமைச்சராக கூட அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
Also Read: ஸ்டாலின் Vs விஜய், உதய் Vs விஜய்.. குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுமா தளபதியின் தமிழக வெற்றி கழகம்.?
சரத்குமார்: சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி ஒரு சில முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. மேலும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் சரத்குமாருக்கு செல்வாக்கு ரொம்பவும் அதிகம்.
கார்த்திக்: நவரச நாயகன் கார்த்திக் கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி என்னும் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி அவருக்கு பெரிதாக பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த கட்சியாக இவர் அதை அடையாளப்படுத்தியது தான் அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
கருணாஸ்: நடிகர் கருணாஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்னும் கட்சியை தொடங்கினார். குறிப்பிட்ட சாதியின் முன்னேற்றத்திற்காக தொடங்கிய கட்சி என இதை குறிப்பிடுவது உண்டு. கருணாசும் அதை ஒருபோதும் மறுத்தது கிடையாது.
கமல்ஹாசன்: கமலஹாசனின் அரசியல் என்று என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஒரு சில மாதங்களிலேயே ஒரு பெரிய மாநாட்டை கூட்டி தன்னுடைய மக்கள் நீதி மையக் கட்சியை தொடங்கினார். இன்று வரை தன்னை ஒரு ஆக்டிவான அரசியல்வாதியாக வைத்திருக்கிறார்.
மன்சூர் அலிகான்: தன்னுடைய வித்தியாசமான கருத்துக்களால் எப்போதுமே சர்ச்சையில் சிக்கி கொள்பவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக புலிகள் என்னும் கட்சியை தொடங்கினார்.
விஜய்: தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக இருக்கும் தளபதி விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதோடு மட்டுமல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.