Actor Dhanush’s film was a flop with a hard performance: கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட் வரை வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டு நடித்து வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் கடின உழைப்பை கொட்டியும் தனுஷின் படம் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் பல கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.
130 கோடி செலவில் எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் உலக அளவில் பிசினஸ் பண்ணதுலையே 10 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து பொங்கலுக்கு லாபம் பார்க்க நினைத்தனர். ஆனால் கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆன அதே தினத்தில் தான் சிவகார்த்திகேயனின் அயலான் படமும் ரிலீஸ் ஆனது.
இதுவரை தமிழ் சினிமா கையில் எடுக்காத ஏலியன் கான்செப்டில் அயலான் படம் இருந்ததாலும் ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் அயலானுக்கு கிடைத்தது. அதே சமயம் ரத்தக் களரியும் சண்டை காட்சிகளும் நிறைந்த கேப்டன் மில்லர் படத்திற்கு எதிர்பார்த்த கலெக்ஷன் ஆகல. படம் முழுக்க தோட்டாக்கள் சத்தம் கேட்டதால் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்காமல் போய், படம் பிளாப் ஆனது.
Also Read: தனுஷுக்கு போட்டியாக சிம்பு கைவசம் இருக்கும் 5 பார்ட் 2 படங்கள்.. மாஸாக ரெடி ஆகும் STR 50
கஷ்டப்பட்டு எடுத்தும் ஓடாமல் போன தனுஷின் கேப்டன் மில்லர்
இந்த படத்தை 22 கோடி கொடுத்து வாங்கி, ஐந்து கோடி நஷ்டம் ஏற்பட்டது தான் மிச்சம் என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். தமிழகத்திலேயே இப்படின்னா மற்ற மாநிலங்களில் கேப்டன் மில்லர் ஓடி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த படத்தை ரொம்பவே கஷ்டப்பட்டு எடுத்தும் பிளாப் ஆனது தான் தனுஷ் உட்பட கேப்டன் மில்லர் படக் குழுவினருக்கு இருக்கும் வேதனை.
அதோடு சினிமாவில் தனுஷ் வளர்த்து விட்ட சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்வி விட்டேனே! என்றும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார். ஆனால் எப்படிப் பார்த்தாலும் வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனின் அயலான் படமும் கேப்டன் மில்லரோடு சேர்ந்து பிளாப் ஆகிவிட்டது. ஆக மொத்தம் ‘உன்னால நான் கேட்டேன், என்னால நீ கேட்டேன்’ என்பதுதான் கேப்டன் மில்லர், அயலான் படத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
Also Read: நூறு கோடி வசூல் வேட்டைய முடிச்ச தனுஷ்.. அடுத்தடுத்து வெளிவர உள்ள படங்கள்