வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

விஜய்யை பார்த்து CM க்கு ஆசைப்படும் 4 நடிகர்கள்.. காசு பணம் இருந்தா அரசியலுக்கு வந்து விடலாமா என்ன?

5 actors who want to become CM after watching Vijay: விஜய் தன்னுடைய அரசியலின் கட்சி பெயரை அறிவித்ததில் இருந்து ஒவ்வொரு விஷயங்களும் தொடர்ந்து பூதாகரமாக வெடித்து வருகிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிற்கப் போகிறார். அதற்கான பணிகளை மிக மும்பரமாக செயல்படுத்த இருக்கிறார் என்று தெரியவந்தது. ஆனால் இன்னொரு பக்கம் அப்படி என்றால் இனி விஜய் படங்களில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வியும் எழும்புகிறது.

ஆனால் இன்னும் இரண்டு வருடங்கள் எலக்சனுக்கு இருப்பதால் அதற்குள் முடிந்தவரை படத்தில் நடித்து விட வேண்டும் என்று இன்னொரு பக்கம் முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு இடையில் விஜய் முதலமைச்சர் பதவிக்கு நேரடியாக நிற்கப் போகிறார் என்று வெளியானதிலிருந்து பலருக்கும் மிகப்பெரிய பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரை சினிமாவில் நடித்து உச்ச நட்சத்திரங்களாக ஜெயித்த விஜய் தற்போது அரசியலிலும் வருவதால் எங்கே ஜெயித்து முதலமைச்சராக ஆகி விடுவாரோ என்ற பயமும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் இருக்கிறது. அத்துடன் விஜய் அரசியலுக்கு நுழைந்து CM- பதவிக்கு வரப் போகிறார் என்றால் ஏன் நாமளும் முயற்சி பண்ணக்கூடாது என்று இன்னும் சில பேர் புதிதாக CM பதவிக்கு ஆசைப்பட்டு வர இருக்கிறார்கள்.

Also read: விஜய், அஜித்துக்கு முதலமைச்சராகவும் யோகம் உண்டா.? ஜோசியரை நம்பும் சினிமா

அந்த வகையில் காலங்காலமாக அரசியலில் வாரிசு நடிகர்களாக ஜெயித்துவரும் திமுக கட்சியில் உதயநிதி இளைஞர் அணி செயலாளர், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்து இவருடைய முயற்சி அனைத்தும் எப்படியாவது முதலமைச்சராக ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் இறங்கிவிட்டார்.

அடுத்தபடியாக நடிகர் விஷால், என்ன தைரியத்தில் தமிழகத்தில் வந்து அரசியலில் நுழைந்து ஆட்சி பண்ண வேண்டும் என்று நினைக்கிறார் தெரியவில்லை. அக்கட தேசத்தில் இருந்து வந்து ரெண்டு மூணு படங்களில் வெற்றியை கொடுத்து விட்டால் தமிழ்நாட்டை ஆளெல்லாம் என்று விஜய்க்கு போட்டியாக அரசியலில் இறங்குவதற்கு துணிந்து விட்டார். அப்படியே இவர் நின்னாலும் இவருக்கு முதலில் யார் ஓட்டு போடுவாங்க, என்ன நம்பிக்கையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

அடுத்தபடியாக ஏதாவது ஒரு நல்லது செய்துவிட்டால் மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து விடலாம் என்று சூர்யா மற்றும் கார்த்தி போட்டி போட்டு உதவி செய்து வருகிறார்கள். இதை வைத்தே அரசியலுக்குள் நுழைந்து CM ஆகிவிடலாம் என்று ஒரு புது கணக்கு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் ஒரு புது கட்சியை ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. இப்படி எல்லோரும் வரிஞ்சு கட்டிட்டு வந்தால் அரசியல் என்ன கெதி ஆகப்போகிறது.

Also read: தீயாய் பரவும் தளபதி விஜய்யின் கடைசி பட அப்டேட்.. அடக்க முடியாமல் சிரிக்கும் வெற்றிமாறன்

- Advertisement -spot_img

Trending News