செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 காமெடியன்கள்.. ராஜ வாழ்க்கை வாழும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்

Redin Kingsley: ஒரு சில நடிகர்களுக்கு முதல் படமே ஒர்க்கவுட் ஆகிவிடும். ஒரு சிலருக்கு பல வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் அவர்கள் முகம் கூட மக்களுக்கு ரிஜிஸ்டர் ஆக வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட 5 நடிகர்கள் சரியான நேரத்தில் ஒரு படத்தில் நடித்து ஓவர் நைட்டில் ஒபாமா ஆகியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 காமெடியன்கள்

ரெடிங் கிங்ஸ்லி: நடன கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ரெடிங் கிங்ஸ்லி 1998 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் வந்திருப்பார். இயக்குனர் நெல்சன் உடன் ஏற்கனவே அவருக்கு அறிமுகம் இருந்ததால் நெல்சன் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் கிங்ஸ்லியை நடிக்க வைத்தார். அதைத்தொடர்ந்து எல்கேஜி, ஏ1 போன்ற படங்களில் நடித்த கிங்ஸ்லிக்கு டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

பெப்சி விஜயன்: ஸ்டண்ட் கலைஞராக இருந்த பெப்சி விஜயன் தில் படம் மூலம் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். நடிகர் சந்தானம் இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் இவருடைய காமெடியான இன்னொரு பக்கத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் சந்தானம் நடித்த மிகப்பெரிய ஹிட் அடித்த டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் இவர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறார்.

Also Read: நவரச நாயகன் மீது கிரஷில் இருந்த 4 நடிகைகள்.. சாமியாருக்கு முன்பு கருப்பழகி போட்ட தூண்டில்

ரவி மரியா: உதவி இயக்குனராக இருந்த ரவி மரியா கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன குஷி படத்தின் மூலம் நடிகரானார். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் இவர் நடித்து வந்தாலும் தேசிங்கு ராஜா படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமானவராக இவர் இல்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆன சந்திரமுகி 2 படம் இவருக்கு ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது.

முனீஸ் காந்த்: சினிமாவில் எப்படியாவது நடிகராகி விட வேண்டும் என பல வருடங்களாக முயற்சி செய்தவர் தான் முனீஸ் காந்த். கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் முனீஸ் காந்துக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முண்டாசுப்பட்டி படம் இவரின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அதை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்தாலும் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் படம் அவருக்கு கை கொடுத்து இருக்கிறது.

மன்சூர் அலிகான்: நடிகர் மன்சூர் அலிகானை மீண்டும் ட்ரெண்டாக்கிய பெருமை இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தான் சேரும். மன்சூர் அலிகான் பேச்சு தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என ஒரு மேடையில் லோகேஷ் சொல்லியிருப்பார். தொடர்ந்து விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் நடித்த ஒரு படத்தின் பாடலை உபயோகித்து மீண்டும் அவரை ரசிகர்களுக்கு பரீட்சையமாக்கினார். அதை தொடர்ந்து லியோ படத்தில் நடித்ததன் மூலம் மன்சூர் அலிகானுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியிருக்கிறது.

Also Read:ரீ-என்ட்ரியை தவறவிட்ட 5 ஹீரோக்கள்.. போர்தொழிலோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட ரஜினியின் நண்பன்

 

Trending News