Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை யார் கடத்தினார் என்கிற உண்மை தற்போது ஓரளவுக்கு தெரிந்து விட்டது. அதாவது இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் குணசேகரன் தான். தர்ஷினியை மறைத்து வைத்து எல்லா தவறையும் ஜீவானந்தம் மேல் பழியை போடலாம் என்று பிளான் பண்ணி இருக்கிறார்.
அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு காய் நகர்த்தி வரும் பொழுது ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி இவர்கள் நான்கு பேரும் குணசேகரனை எதிர்த்து தர்ஷினியை தேடி போக ஆரம்பித்தார்கள். அத்துடன் கிட்ட நெருங்குகிறார் என்று தெரிந்ததும் அங்கே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு குணசேகரன் போன் பண்ணி ஜீவானந்தத்தை அரெஸ்ட் பண்ண சொல்லி இருக்கிறார்.
அதற்கு ஏற்ற மாதிரி சரியாக ஜீவானந்தம் தர்ஷினியை கண்டுபிடிக்க போகும் பொழுது போலீசார் அவரை விசாரணைக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள். பிறகு இந்த நான்கு பெண்களும் அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டார்கள் என்று தெரிந்ததும் அவர்களையும் போலீஸ் மூலம் குணசேகரன் மடக்கி விட்டார்.
ஆக மொத்தத்தில் தர்ஷினி கடத்திட்டுப் போய் வைத்தது குணசேகரன் தான். தற்போது காணாமல் போன தர்ஷினி எங்கே இருக்கிறார் என்று தேடாமல் கதையை வேற விதமாக திசை திருப்பிக் கொண்டு போவது கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. எப்படி இருந்த நாடகம் இப்படி படுமோசமாக போய்விட்டது என்று பலரும் இந்த நாடகத்தை வெறுப்புடன் பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒரு விஷயம் பார்க்க இதமாக இருக்கிறது என்றால் கதிர் திருந்தி தங்கச்சிக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதலாக இருப்பது தான். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அனைவரும் கோர்ட்டில் நிற்கும் பொழுது குணசேகரன் நினைத்தபடி லாயரும், அனைத்து தவறுமே ஜீவானந்தம் மற்றும் அந்த நான்கு பெண்கள் மீது தான் இருக்கிறது என்பதுக்கேற்ற மாதிரி குற்றச்சாட்டு வைத்து விட்டார்.
ஆனால் இங்கேதான் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. சரியான நேரத்தில் தர்ஷினி கோர்ட்டுக்கு ஆஜராகி நடந்த உண்மையை சொல்கிறார். இதற்கிடையில் தர்ஷினி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து தோழர் கண்ணுக்கு பட்டதும் அவரைக் காப்பாற்றி கூட்டி வருகிறார். அத்துடன் இந்த விசாரணையை தொடர்ந்து சாறுபாலா நடத்தப் போகிறார்.
Also read: கதிரிடம் செண்டிமெண்டாக பேசி லாக் செய்த கோமதி.. ருத்ரதாண்டவத்தை ஆடப்போகும் பாண்டியன்