சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கமல் படம்ன்னா கண்டிப்பா இந்த நாலு பேர் இருப்பாங்க.. குருதிப்புனல் முதல் தக்லைஃப் வரை நடிக்கும் ஜாம்பவான்

Kamal Haasan: உலக நாயகன் கமலஹாசனின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் நிறைய நடிகர்களுக்கு இடம் உண்டு. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பாரா என்று கேட்டால், அதற்கு இல்லை என்பதுதான் பதில். நட்பு என்பதையும் தாண்டி இந்த கேரக்டர் இவர்களால் தான் நடிக்க முடியும் என்று கமல் நம்பிக்கை வைத்து ஒரு சில நடிகர்களுக்கு தன்னுடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார். அப்படி கமல் நம்பிக்கையாக வாய்ப்பு கொடுக்கும் நான்கு நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

கமலுக்கு நெருக்கமான நான்கு பேர்

நாசர்: நாசர் மற்றும் கமல் இருவருக்கும் இடையேயான நட்பு பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. குருதிப்புனல், நாயகன், அவ்வை சண்முகி, உத்தம வில்லன் என கமல் நடிக்கும் முக்கியமான படங்களில் எல்லாம் நல்ல ரோல்கள் நாசருக்கு கிடைப்பதுண்டு. குருதிப்புனல் போன்ற படத்தில் நாசருக்கு சீரியஸ் ஆகவும் நடிக்க தெரியும், அவ்வை சண்முகி போன்ற படத்தில் காமெடியில் கலக்கவும் தெரியும். தற்போது கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் மீண்டும் உருவாகும் தக்லைஃப் படத்திலும் நாசர் கமலுடன் இணைகிறார்.

Also Read:நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனதற்கு இதுதான் காரணம்.. உலக அளவில் பரந்து விரிந்து இருக்கும் சொந்தத் தொழில்

சந்தான பாரதி: நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதி, கமலுக்கு பள்ளி காலத்து நண்பர் ஆவார். ஆரம்ப காலங்களில் கமலின் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சந்தான பாரதி தொடர்ந்து அவரை வைத்து குணா மற்றும் மகாநதி போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே கமலின் கேரியரில் ரொம்பவும் முக்கியமான படங்கள். படம் இயக்குவதை சந்தன பாரதி நிறுத்திவிட்டாலும், தொடர்ந்து கமல் தன்னுடைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

ஜெயராம்: கமல் மற்றும் மலையாள நடிகர் ஜெயராம் இருவருக்கும் இடையே ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் மற்றும் தெனாலி போன்ற படங்களை இப்போது பார்த்தால் கூட வயிறு குலுங்க சிரித்து விடலாம். அதேபோன்று உத்தம வில்லன் படத்தில் கமல் மற்றும் ஜெயராம் வரும் காட்சிகள் கண்களை கலங்க வைத்திருக்கும். கமலுக்கு மனதிற்கு நெருக்கமான நடிகர்களின் இவரும் ஒருவர்.

நெப்போலியன் : நெப்போலியன் நடித்த சீவலப்பேரி பாண்டி படம் பார்த்தது முதல் கமலுக்கு மிகவும் நெருக்கமான நடிகராக அவர் மாறிவிட்டார். அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை என்றாலும் விருமாண்டி படத்தில் கமல் நெப்போலியனை அழைத்து நல்லம்ம நாயக்கர் கேரக்டரை கொடுத்து இருக்கிறார். இந்த கேரக்டர் நெப்போலியன் சினிமா கேரியரில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதை தொடர்ந்து நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தாலும் தசாவதாரம் படத்தில் நெப்போலியன் தான் நடிக்க வேண்டும் என விரும்பி கமல் போன் போட்டு அவரை அழைத்து சோழ மன்னன் கேரக்டரில் நடிக்க வைத்தார்.

Also Read:லீக்கான சிவகார்த்திகேயனின் பட டைட்டில்.. SK-21 படத்தில் கைவரிசையை காட்டிய கமல்

Trending News