Top 5 channels: தொடர்ந்து டிஆர்பியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கும் தனியார் தொலைக்காட்சிகள் எது என்பதை குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் டாப் 5 சேனல்கள் எவை என்பதை பார்ப்போம்.
டாப் 5 சேனல்களின் லிஸ்டில், கலைஞர் தொலைக்காட்சி 5-வது இடத்தில் இருக்கிறது. 4-வது இடத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும் கே டிவி உள்ளது. இதில் என்னதான் அரைச்ச மாவையே அரைப்பது போல், போட்ட படத்தையே போட்டுக் கொண்டே இருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் படங்களை தொடர்ந்து ஒளிபரப்பு செய்து டாப் சேனல்களின் லிஸ்டில் நான்காவது இடத்தை பிடித்து விட்டது.
தொடர்ச்சியாக 3-வது இடத்தில் ஜீ தமிழ் உள்ளது. இதில் வாரம் முழுவதும் காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளை குஷிப்படுத்தும் விதமாக வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட சீரியல்களை ஒளிபரப்பு செய்கின்றனர். குறிப்பாக கார்த்திகை தீபம், அண்ணா, மாரி, நினைத்தேன் வந்தால்,வித்யா போன்ற சீரியல்கள் இப்போது டிஆர்பி-யில் முட்டி மோதி முன்னிலை வகிக்கிறது.
Also Read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி
டாப் 5 சேனல்ஸ்
இதைத்தொடர்ந்து 2-வது இடம் விஜய் டிவிக்கு கிடைத்திருக்கிறது. என்டர்டைன்மென்ட்க்கு பெயர் போன விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், அண்டாக்கா கசம் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து சின்னத்திரை ரசிகர்களை எப்போதுமே தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களும் டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் முதலிடம் சன் டிவிக்கு கிடைத்துள்ளது. சீரியல் என்றாலே சன் டிவி சீரியல்கள் தான் என்று ஆகிவிட்டது. அந்த அளவிற்கு திரைப்படங்களுக்கு நிகரான கதை களத்துடன் வித்தியாச வித்தியாசமான சீரியல்களை சன் டிவி ஒளிபரப்பு செய்கிறது. அதிலும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தைப்போல, இனியா, ஆனந்த ராகம் போன்ற சீரியல்களை எல்லாம் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை.
Also Read: எழில் வாழ்க்கையில் வெடிக்க போகும் பூகம்பம்.. பக்காவாக பிளான் போடும் அமிர்தாவின் எக்ஸ் புருஷன்