5 films which are not released: திரை உலகில் ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. பல பிரச்சனைகளை தாண்டி தான் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. ஆனா அந்த பிரச்சினையை எல்லாம் சமாளிக்க முடியாமல் இன்னமும் ஐந்து படங்களை பல வருடங்களாகவே ரிலீஸ் செய்யாமல் பத்திரமாய் அலமாரியில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த படங்களை பற்றி பார்ப்போம்.
நரகாசூரன்: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மீகா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாரான படம் தான் நரகாசூரன். திரில்லர் ஜானரில் வித்யாசமான கதை களத்துடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை, இப்போது வரையிலும் ரிலீஸ் செய்யாமல் அப்படியே பொத்தி பொத்தி வைத்து அழகு பார்க்கின்றனர்.
அந்தகன்: இயக்குனர் தியாகராஜன் இயக்கி தயாரித்த இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு பார்வையற்ற பியானோ கலைஞர் அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கிக் கொள்கிறார், அதிலிருந்து எப்படி அவர் மீண்டு வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்தப் படத்தை கடந்த வருடமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனா அந்தகன் படத்தை ஓடிடியில் விற்றுவிட்டு தான் தியேட்டரில் ரிலீஸ் செய்யணும் என்று தியாகராஜன் இன்னும் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார். ஆனால் இலவு காத்த கிளி போல, இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பிரசாந்த் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
இடம் பொருள் ஏவல்: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான படம் தான் ‘இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தின் எல்லா ப்ரமோஷன் வேலைகளும் முடிந்தும் படம் ரிலீஸ் ஆகவில்லை. முதலில் கொரோனா ஊரடங்கின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. ஆனால் இப்போது படத்தின் தயாரிப்பாளரான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் பண பிரச்சனையால் படத்தை ஏழு வருடமாகவே ரிலீஸ் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றனர்.
Also Read: 4 நண்பர்களை இன்றும் விட்டுக் கொடுக்காத விஜய் சேதுபதி.. அன்பளிப்பாய் கொடுத்த ஆசை கார்
கிடப்பில் போடப்பட்ட ஐந்து படங்கள்
ஜோஸ்வா இமைப்பு காக்க: வாரணம் ஆயிரம், மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற மறக்க முடியாத ரொமான்டிக் படங்களை கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் நடித்திருக்கும் ‘ஜோஸ்வா இமைப்பு காக்க’ என்ற படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது.கோவிட் 19 காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. சுமார் மூன்று வருடமாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்யாமலே கிடப்பில் போட்டிருக்கின்றன. இந்த படத்தின் கதையே ஹீரோ லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பணக்கார வீட்டு பெண்ணை பாதுகாக்கும் ‘bodyguard’ ஆக இருப்பது தான்.
துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு, ஒரு வழியாக படத்தை முடித்து கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி தருவதாக சொல்லி 2 கோடியை கௌதம் வாங்கி இருக்கிறார். படமும் இயக்கவில்லை, பணத்தையும் தரவில்லை என்று கோர்ட்டுக்கு சென்று விட்டனர். 2 கோடியை கொடுக்கும் வரை துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 2 கோடி பணத்தை கொடுத்துட்டா பிரச்சனை முடிஞ்சிடும், துருவ நட்சத்திரம் படத்தையும் ரிலீஸ் செய்து விடலாம். ஆனால் எதுக்குமே வளைந்து கொடுக்காமல் கௌதம் மேனன் சாதிப்பது சரி இல்லை.
Also Read: பொம்பள சோக்குனு பகிரங்கமாக பிஸ்மி வச்ச குற்றச்சாட்டு.. சீனு ராமசாமி கொடுத்த பதில் என்ன தெரியுமா?