வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிவகார்த்திகேயனை பார்த்து ஆசைப்பட்டது தப்பா போச்சு.. அல்லோலப்படும் SK-இன் உயிர் நண்பன்

SivaKarthikeyan’s Friend: சினிமாவில் பேரும் புகழும் வேண்டுமென்றால் ஹீரோவாக இருந்தால் மட்டும்தான் சாத்தியமாகும் என்று பலரும் நினைக்கிறார்கள். அதனால் தான் வாய்ப்பு கொஞ்சம் கிடைத்ததும் உடனே அனைவரும் ஹீரோவாக ஆகிவிட வேண்டும் என்று கனவு கோட்டை கட்டி விடுகிறார்கள். ஆனால் இதில் நமக்கு என்ன வருமோ, நாம் எப்படி இருந்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பதை மறந்து விட்டு சிலர் நப்பாசையில் அலைந்து திரிகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் காமெடி நடிகராக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த சில நடிகர்கள் அடுத்தடுத்து ஹீரோவுக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அதைத் தேடிப் போகிறார்கள். ஆனால் அங்கே போய் பார்த்தால் தான் தெரியுது அது எவ்வளவு பெரிய குதிரைக்கொம்பாக இருக்கிறது என்று. இந்த வரிசையில் பல காமெடி நடிகர்கள் போயிருந்தாலும் சமீபத்தில் நமக்கு தெரிந்து போனவர்கள் சந்தானம், சதீஷ், சூரி மற்றும் யோகி பாபு.

இதில் யோகி பாபு மற்றும் சூரி கதையின் நாயகனாக முக்கியமான கதாபாத்திரத்தை எடுத்து மெருகேற்றி வருகிறார்கள். ஆனால் சந்தானமும், சதீஷும் சிவகார்த்திகேயனை பார்த்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசைப்பட்டு இவர்களுடைய டிராக்கையே மாற்றி கொண்டார்கள். சில பேர் பட்டாதான் புத்தி வரும் என்று சொல்வதற்கு ஏற்ப சந்தானம் ஓரளவுக்கு பண்ணின தப்பை புரிந்து கொண்டார்.

Also read:பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் முக்கியமான 5 படங்கள்.. சைக்கோ இயக்குனருடன் நேருக்கு நேர் மோதும் சந்தானம்

ஆனால் சதீஷ் காமெடி டிராக்கில் யாருமே இல்லாத பொழுது தனி ஒரு ஆளாக கொஞ்சம் கொஞ்சமாக இருந்து வளர்ந்து வந்தார். ஆனால் இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் எல்லாம் போய்விடும் என்பதற்கு ஏற்ப தற்போது சதீஷின் நிலமை இருக்கிறது. எப்போது ஹீரோவாக வேண்டும் என்று நினைத்தாரோ அப்பொழுது இவருக்கு வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

இப்பொழுது என்னை காமெடி நடிகனாக ஆவது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பார்ப்பவர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறார். இப்போ புலம்பி என்ன ஆகப்போகிறது. சினிமாவிற்குள் நுழைந்தவர்கள் எல்லாம் ஹீரோவாகிவிட்டால் காமெடி கேரக்டருக்கு யார் தான் நடிப்பார்கள். அதுவும் சதீஷ் ஹீரோவாக நடித்தால் அந்த படமும் காமெடியாக தான் இருக்கும். இதற்கு பேசாமல் அவர் காமெடியிலேயே ஒழுங்காக நின்னு ஜெயித்துக் காட்டி இருக்கலாம்.

Also read: அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி

Trending News