Sivakarthikeyan’s Friend: இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு தன்னுடைய 73 வயதிலும் ஹீரோவாக வெற்றி நடை போட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அத்துடன் காலத்திற்கு ஏற்ப கதையும், நடிப்பையும் மாற்றிக் கொண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் பழைய பஞ்சாங்கத்தை பேசாமல் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்களுடன் கைகோர்த்து அதற்கு ஏற்ற மாதிரி நடித்து வருகிறார்.
அதனால் தான் இவருடைய படங்கள் வெற்றியடைந்து வருகிறது. அப்படிப்பட்ட இவருடன் இளம் இயக்குனர் கைகோர்ப்பதாக இருந்தது. ஆனால் அந்த இயக்குனரின் ஆட்டிட்யூட் சரிப்பட்டு வராததால் ரஜினி அவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். பின்னர் ரஜினி அந்த இயக்குனர் வேண்டாம் என்று சொன்னதால் மற்ற நடிகர்களும் அவருடன் இணைவதற்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது.
பிறகு அவருக்கு வேறு வழியில்லாமல் அக்கடதேசத்தில் படத்தை எடுத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று போனார். அந்த வகையில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் நானி-யிடம் கதை சொல்லி சம்மதத்தையும் வாங்கிக் கொண்டார். அதற்கு ஏற்ற மாதிரி சூட்டிங் எல்லாம் ஆரம்பித்த நிலையில் பிறகு என்ன காரணங்கள் என்று தெரியாத அளவிற்கு படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது.
இதனால் அங்கேயும் அந்த இளம் இயக்குனரின் பருப்பு வேகாததால் மறுபடியும் தமிழ் சினிமாவிற்கு வந்து விட்டார். வந்ததும் அவருடைய நெருங்கிய நண்பராக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்து விட்டார். இவர்கள் ரொம்பவே நல்ல பிரண்ட்ஸாக பழகி வந்திருக்கிறார்கள். அத்துடன் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு படம் பண்ணி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார். அந்த இளம் இயக்குனர் வேறு யாருமில்லை டான் படத்தை எடுத்த சிபி சக்கரவர்த்தி.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் சிபி கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. மேலும் எஸ்கே வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். அதாவது தற்போது அமரன் படத்தை முடித்துவிட்டு, ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படம் பண்ணப் போகிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இடம் ஒரு படம் பண்ணுவதாக கமிட் பண்ணி விட்டார்.
கிடைக்கிற வாய்ப்பை எக்காரணத்தை கொண்டும் மிஸ் பண்ண கூடாது என்று எஸ்கே எடுத்த முடிவு அவருக்கு சாதகமாக தான் அமைந்து கொண்டு வருகிறது. அதனால் தான் அவருக்கு தற்போது வரிசை கட்டி படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஏற்பட்ட கெட்ட இமேஜை மறக்கடிக்கும் வகையில் அடுத்தடுத்து படங்களை நடித்து வெளியிட்டால் ஒரு நல்ல இடத்திற்கு வந்து விடலாம் என்று முயற்சி செய்து வருகிறார்.