வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்தும் 5 நடிகர்கள்.. SK-க்கு குடுப்பீங்க எனக்கு இல்லையா! டிமாண்ட் வச்ச தனுஷ்

5 actors increase their salary: எந்த நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுகிறதோ அவர்களே முன்னணி ஹீரோகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்களின் வெற்றி படங்களை பொறுத்து அவர்களுடைய சம்பளமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதில் சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வேண்டும் என்று தற்போது போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தி உள்ளார்கள். அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

மணிகண்டன்: சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த ஜெய் பீம் படத்தின் மூலம் தான் பரிச்சயமானார். இதற்கு அடுத்தபடியாக கடந்த வருடம் வெளிவந்த குட் நைட் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். அந்த வகையில் தற்போது இளம் நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். மேலும் இதுவரை இவர் சம்பளமாக ஒரு கோடி வாங்கி வந்தார். ஆனால் இதற்கு அடுத்து இவர் நடிக்கக்கூடிய படங்களில் 4 கோடி சம்பளம் வேண்டும் என்று உயர்த்தி விட்டார்.

விஷ்ணு விஷால்: யாருக்குமே வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை என்பதற்கு ஏற்ப இவருடைய படங்கள் ஏற்ற இறக்கமாக வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும் தற்போது பெரிய இடத்து சகவாசம் ஏற்பட்டதால் இதுவரை 2 கோடி சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்த இவர் அடுத்த படத்தில் இருந்து 5 கோடி சம்பளம் வேண்டும் என்று கட்டன் ரைட்டாக கூறிவிட்டார்.

Also read: நம்பிக்கை நட்சத்திரங்களாக வளர்ந்து வரும் 5 இளம் ஹீரோக்கள்.. ட்ரெண்ட் செட்டராக இருக்கும் மணிகண்டன்

கவின்: எங்கோ ஒரு மூலையில் கிடைக்கிற கேரக்டரை நடித்து வந்த கவினுக்கு தற்போது ஏறுமுகமாக எல்லாம் வெற்றியாக வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் போயிட்டு வந்த பிறகு இவருக்கு சுக்கிர திசை அடித்து விட்டது என்றே சொல்லலாம். அதன் பின் இவருடைய நடிப்பில் வெளிவந்த லிப்ட், டாடா போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. அதன் மூலம் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. இதனால் இதுவரை ஒரு கோடி சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்த கவின் தற்போது 2 கோடி வேண்டும் என்று உயர்த்தி விட்டார்.

சிவகார்த்திகேயன்: இவருடைய படங்களுக்கு எப்பொழுதுமே மக்கள் குடும்பத்துடன் ஏகபோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதனாலயே இவருடைய மார்க்கெட் ஒவ்வொரு படத்திற்கும் கூடிக் கொண்டே வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் சரிவை பார்த்து இருந்தாலும் இவருக்கான மவுஸ் மட்டும் குறையவில்லை. அந்த வகையில் இதுவரை 35 கோடி சம்பளத்தை வாங்கி வந்த எஸ்கே இப்பொழுது 45 கோடி சம்பளம் வேண்டும் என்று டிமான்ட் பண்ணி விட்டார்.

தனுஷ்: நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முளைச்சவங்க எல்லாம் சம்பளத்தை கூட்டும் பொழுது நான் ஏன் கேட்கக் கூடாது என்பதற்காக தனுஷும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார். அதாவது சிவகார்த்திகேயன் வந்த கொஞ்ச நாட்களிலேயே கோடிக்கணக்கில் சம்பளத்தை கூட்டி கேட்டதும் அவர்களுக்கு கொடுக்கிறீர்கள். அப்படி என்றால் நான் மட்டும் ஏன் கேட்கக்கூடாது என்பதற்கு ஏற்ப தனுஷும் 35 கோடி சம்பளத்திலிருந்து 50 கோடி சம்பளம் வேண்டும் என்று கரராக பேசி விட்டார். அதுவும் சிவகார்த்திகேயனை விட ஒரு படி மேல வேண்டும் என்பதால் 5 கோடி அதிகமாக வச்சு கேட்டிருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கும் வேற வழி இல்லை இவர்கள் கேட்ட சம்பளத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.

Also read: தனுஷ் போல் நடிப்பில் ஆட்சி செய்யும் நடிகை.. வேட்டையன் படத்துக்கு பின் கதவை தட்டிய வாய்ப்பு

- Advertisement -spot_img

Trending News