Tamil Actors: தமிழ் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் எதுக்கு இப்படி ஜெட் வேகத்துல ஏறுதுனே தெரியல. இவர்களெல்லாம் கோடிக்கணக்கில் சம்பளத்தை கேட்பதால் தான் ஒரு படத்தின் பட்ஜெட் அசால்ட்டாக 100 கோடிக்கு மேல் எகிறுகிறது. அதிலும் சக நடிகர்களின் சம்பளத்தை கேட்டு வயிற்றெரிச்சலில் தங்களது சம்பளத்தையும் உயர்த்திய ஐந்து ஹீரோக்களை பற்றி பார்ப்போம்.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பார்க்கப்படுகிற தளபதி விஜய், ஒரு படத்திற்கு இப்போது 200 கோடி சம்பளம் வாங்குகிறார். திரையரங்கில் எப்போதுமே தல, தளபதி இருவரின் படங்களுக்கு தான் தள்ளுமுள்ளு ஏற்படும். ஏனென்றால் அந்த அளவிற்கு தளபதியுடன் சரிக்கு சரி போட்டி போடக்கூடிய அஜித், விஜய்க்கு நிகரான ரசிகர்களை வைத்திருப்பது மட்டுமல்ல வசூலிலும் பட்டையை கிளப்புவதால் தன்னுடைய சம்பளத்தை 160 கோடியிலிருந்து 200 கோடி கொடுங்கள் என்று அடம் பிடித்து கேட்டு வாங்குகிறார்.
அதே போல் விஜய்யின் சம்பளம் 200 கோடி என்றால், விஜய்க்கு மேல இருக்கும் எனக்கு அதைவிட 10 லட்சம் சேர்த்து போட்டு, 200 கோடியே 10 லட்சம் சம்பளம் வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடம் பிடிக்கிறார்.
போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தை உயர்த்தும் 5 ஹீரோக்கள்
மேலும் இளம் நடிகராக அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலை காட்டிய பிறகு, அவரும் வசூல் நாயகன்களின் லிஸ்டில் வந்து விட்டார். இதனால் இப்போது ஒரு படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்குகிறார்.
நேத்து பெய்த மழையில இன்னைக்கு முளைத்த காளானுக்கு எல்லாம் 40 கோடி கோடி சம்பளம் என்றால், எனக்கு மட்டும் ஏன்? என்ற கேள்வியை எழுப்பி தனுஷும் இப்போது 50 கோடி சம்பளம் கேட்கிறார். அதே போல் தான் சிம்புவும் தற்போது கமிட்டாகும் படங்களுக்கு 40 கோடி சம்பளம் கேட்கிறார். ஆனால் தயாரிப்பாளர்கள் கொடுக்க யோசிக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு மட்டும் கொடுக்குறீங்க எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு யோசனை? என்றும் வம்பு பண்ணி 40 கோடியை எப்படியோ வாங்கி விடுகிறார்.