Nepotisam Killed a Tamil Actor: இப்போதைய காலகட்டத்தை பொறுத்த வரைக்கும் எல்லா துறையிலுமே நெப்போடிசம் வந்துவிட்டது. ஆனால் கலைக்கு மொழி, இனம் என எந்த வேறுபாடும் கிடையாது என்று சொல்லும் நிலையில் அந்த சினிமாவிலும் நெப்போடிசம் வந்து அது உயிரிழப்பு வரை செல்வது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இவருடைய மரணத்திற்கு இதுதான் காரணம் என்று தெரிந்தும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது தான் பிரச்சனையின் மிகப்பெரிய உச்சம்.
இந்திய சினிமா ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட்டை மறந்துவிட முடியாது. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சின்னச்சின்ன அசைவுகளை கூட அப்படியே திரையில் காண்பித்து ரீல் தோனி என ரசிகர்களிடையே பெயர் வாங்கினார். வட மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து சீரியல்களில் நடிக்க வந்து பின் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார்.
தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமைந்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த். இவருடைய மர்மமான மரணத்திற்கு இந்தி சினிமா உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கான் மற்றும் கபூர் குடும்பங்கள் தான் காரணம் என சொல்லப்பட்டது. இந்தியில் தான் இந்த நெப்போடிசம் என்று பார்த்தால் தென்னிந்தியாவில் தமிழ் நடிகர் ஒருவர் சுஷாந்த் போலவே உயிரிழந்து இருக்கிறார்.
Also Read:லாரன்ஸை ஹீரோவாக்கி அழகு பார்த்த இயக்குனர்.. கடும் வறுமையில் உதவி கிடைக்காமல் இறந்த பரிதாபம்!
சித்திரம் என்னும் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதய் கிரண். தெலுங்கு சினிமா உலகை பொறுத்த வரைக்கும் பெரும்பாலும் நாகார்ஜுனா குடும்பம், வெங்கடேஷ் குடும்பம், என்டிஆர் குடும்பத்தில் இருந்து தான் ஹீரோக்கள் வருவார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த உதய் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
நல்ல வரவேற்பை பெற்று வந்த அவரை எப்படியாவது தங்களுடைய குடும்பத்தில் இணைத்து விட வேண்டும் என்று நினைத்த சிரஞ்சீவி தன்னுடைய மகளுக்கு அவரை திருமணம் முடிக்க முடிவு செய்தார். இவர்களின் திட்டம் தெரிந்த உதய் கிரண் நிச்சயதார்த்தத்தோடு இந்த திருமணத்தை நிறுத்திவிட்டார். இது சிரஞ்சீவிக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சொல்லி இருக்கிறார்.
அதன் பின்னர் அவருக்கு எந்த ஒரு நல்ல பட வாய்ப்புமே கிடைக்கவில்லை. 21 படங்களில் ஒப்பந்தமாகி இருந்த அவரை ஒரே நேரத்தில் தயாரிப்பாளர்கள் படத்தில் இருந்து நீக்கிவிட்டு கொடுத்த அட்வான்சை கேட்டிருக்கிறார்கள். நிதி நெருக்கடி தாங்க முடியாமல் உதய் கிரண் கடந்த 2014 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தமிழில் பொய் என்னும் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read:2 வருடம் கழித்து சுஷாந்த் சிங் மரணத்தில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்.. கொல நடுங்க வைத்த வாக்குமூலம்