வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தமிழ் ரீமேக்கில் பட்டையை கிளப்பிய கமலின் 5 படங்கள்.. 90ஸ் கிட்ஸ்களை அலறவிட்ட ‘நீயா’

Kamal Movies: 70 மற்றும் 80 களின் காலகட்டத்தில் உலகநாயகன் கமலஹாசன் பாலிவுட் சினிமா உலகில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமாவை கழட்டி விட்டுவிட்டு அவர் பாலிவுட் போய்விடுவார் என்று கூட பேசப்பட்டது. ஆனால் கமல் நிறைய ஹிட் படங்களை இந்தி உலகத்திற்கு கொடுத்துவிட்டு டீசன்டாக டாட்டா காட்டி விட்டு வந்து விட்டார். அதே நேரத்தில் ஹிந்தியில் இருந்து ஒரு சில படங்களை தமிழில் ரீமேக் செய்து வெற்றியும் பெற்றார். அப்படி ஹிந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கமலின் 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

குரு: 1973 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான ஜூங்னு என்னும் படத்தை தமிழில் 1980 ஆம் ஆண்டு குரு என்னும் பெயரில் ரீமேக் செய்தார் கமல். இந்த படத்தில் அவருடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்திருந்தார். ஒரே நேரத்தில் கமல் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து இரண்டு மாநிலங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் வெர்ஷன் ஸ்ரீலங்காவில் ரிலீஸ் ஆகி அங்கேயும் பெரிய வரவேற்பை பெற்றது. வசந்த மாளிகை படத்திற்கு பிறகு ஸ்ரீலங்காவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் குரு தான்.

நீயா: இந்தியில் 1976 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் நாகின். இந்த படத்தை தமிழில் நீயா என்னும் பெயரில் ரீமேக் செய்திருந்தார் கமல். பாம்பை வைத்து பயம் காட்டி படம் பார்ப்பவர்களை அலற விட்டிருப்பார்கள். நீயா படத்திற்கு பிறகு பாம்புக்கு நிஜமாகவே பழி வாங்கும் தன்மை உண்டு, ரொம்ப வருடங்கள் வாழும் பாம்பு மனிதனாக மாறும் இச்சாதாரி வகையை சேர்ந்தது என அப்போதைய கிட்ஸ்கள் நம்பும் அளவுக்கு இருந்தது.

Also Read:கமலஹாசன் வாரிசு அடுத்து நாங்கள் தான் என போட்டி போடும் 4 நடிகர்கள்.. உலக நாயகன் கொடுத்த சர்டிபிகேட்

சத்யா: இந்தி மொழியில் 1985 ஆம் ஆண்டு அர்ஜுன் என்னும் பெயரில் ரிலீஸான படத்தை 1988 ஆம் ஆண்டு சத்யா என்னும் பெயரில் கமல் ரீமேக் செய்தார். இந்த படத்தை அவரே தயாரித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கமல் ஆக்சன் ஹீரோவாக களம் கண்ட இந்த படம் அந்த வருடத்தில் மிகப்பெரிய வசூலை பெற்றது. அது மட்டுமல்லாமல் சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பல விருதுகளையும் வாங்கியது.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் : இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்து சரண் இயக்கிய படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ். கமலின் வழக்கமான நடிப்பு மற்றும் கிரேசி மோகனின் அட்டகாசமான வசனங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. 5 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் கோயம்புத்தூரில் மட்டுமே இரண்டு கோடி வசூலை தாண்டி விட்டதாக தகவல் வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பத்து மில்லியன் டிக்கெட்டுகள் இந்த படத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

உன்னை போல் ஒருவன்: பாலிவுட் நடிகர் அனுப்பம் கீர் நடித்த A Wednesday என்னும் படத்தின் தமிழ் ரீமேக் தான் உன்னைப் போல் ஒருவன். இந்த படம் மும்பை வெடிகுண்டு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் கமல் கேரக்டரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்திருந்தார். இரண்டு மொழிகளிலுமே இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also Read:கமலஹாசன் கூட நடித்ததற்கு செவுலில் பளார் வாங்கிய நடிகை.. அல்ட்ரா மார்டன் ஆக்டரை வச்சு செய்து உலக நாயகன்

Trending News